Mukesh reporter high court சென்னையில் பச்சையப்பன் அறக்கட்டளை மற்றும் ஐகோர்ட் நியமித்த AGOT ஆகியோர் நிர்வகிக்கும் 103 கிரவுண்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் எடுக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mukesh reporter high court
சென்னையில் பச்சையப்பன் அறக்கட்டளை மற்றும் ஐகோர்ட் நியமித்த AGOT ஆகியோர் நிர்வகிக்கும் 103 கிரவுண்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் எடுக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் புரசைவாக்கம் – பெரம்பூர் வட்டத்தில், புரசைவாக்கத்தில் வேங்கட வரதையா மேஸ்திரி மற்றும் தாமோதர மேஸ்திரி ஆகியோருக்கு சொந்தமான 287 கிரவுண்ட்க்கும் மேற்பட்ட நிலத்தை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட AGOT எனப்படும் தலைமை நிர்வாகி மற்றும் அதிகாரப்பூர்வ அறங்காவலரும், பச்சையப்பன் அறக்கட்டளையும் நிர்வகித்து வருகின்றனர்.
அந்த நிலத்தில் 103 கிரவுண்ட் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், 1988ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி ரூ. 55,51,380 மற்றும் 5 பைசாவை இழப்பீடாக டெபாசிட் செய்தது.
நிலத்தை கையகப்படுத்தும் நடைமுறைக்கு ஆட்சேபம் தெரிவித்து, AGOT எனப்படும் அதிகாரப்பூர்வ அறங்காவலரும், பச்சையப்பன் அறக்கட்டளையின் செயலாளரும் வீட்டுவசதி வாரியத்தின் முன்பு ஆஜராகிவந்தனர்.
அதன்பின்னர், நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து AGOT தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 1999ஆம் ஆண்டு தொடரபட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பின்னர், புதிய நிலம் கையப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நிலத்தை திருப்பித்தரக் கோரி AGOT தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நிலத்தை கையகப்படுத்தி இருந்தாலும் இன்னும் பயன்பாட்டுக்கு எடுக்காததால், நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கை காலாவதியாகிவிட்டதாக கூறி, 103 கிரவுண்ட் நிலத்தை கையகப்படுத்திய நடைமுறையை ரத்து செய்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து வீட்டுவசதி வாரியம் தகக்ல செய்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் ஆஜராகி, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை சரியானது என 1999ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், இழப்பீட்டுத் தொகையும் டெபாசிட் செய்யபட்டு நிலம் கையகப்படுத்தும் பணியும் முடிவடைந்துவிட்ட நிலையில், கையகப்படுத்தல் நடவடிக்கைகள் காலாவதியானதாக அறிவிக்க எந்த காரணமும் இல்லை என வாதிட்டார். அதை கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதத்தில் வலியுறுத்தினார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பழைய சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு, நிலத்தை திருப்ப ஒப்படைக்கும் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்ட பின்னர், புதிய சட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு முறை வழக்கை நடத்த முடியாது என குறிப்பிட்டுள்ளனர். புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு முன்பே நிலத்தை உடைமையாக்குதல் மற்றும் வைப்புத்தொகை செலுத்துதல் ஆகிய நடைமுறைகள் முடிந்துவிட்ட நிலையில், agot-க்கு கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன், 103 கிரவுண்ட் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.சரவணன் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.
========