Mukesh Reporter திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்து, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.

[06/01, 13:04] Mukesh Reporter

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்து, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார், அரசுப்பாண்டி, பரமசிவம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி G.R.சுவாமிநாதன் டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசு உள்ளிட்டோர் தரப்பில் 20 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், சிக்கந்தர் பாதுஷா தர்கா, கனகவேல் பாண்டியன், அரங்கநாதன் மற்றும் தமிழக அரசு உள்ளிட்டோர் தரப்பில் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள்G.ஜெயச்சந்திரன், K.K.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணை நடைபெற்ற நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்த வழக்குகளில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தீர்ப்பை அறிவித்தனர்.

அந்த தீர்ப்பில், ஆகம சாஸ்திரங்களின்படி கருவறையில் தெய்வத்திற்கு நேராக இல்லாத இடத்தில் விளக்கு ஏற்றுவது ஏற்கத்தக்கது அல்ல என்பதையுன், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது வழக்கத்தில் இல்லை என்பதையும் நிரூபிக்க மேல்முறையீட்டாளர்கள் தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஓராண்டின் குறிப்பிட்ட நாளில் தேவஸ்தானத்தின் பிரதிநிதிகளை மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கேற்ற அனுமதித்தால், பொது அமைதி பாதிக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் வாதம் நகைப்புக்குரியதும், நம்ப முடியாததும் என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், அத்தகைய குழப்பம் ஏற்படும் என்றால் அது அரசு ஊக்குவித்தால் மட்டுமே ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

தங்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற அரசு எத்தகைய நிலைக்கும் செல்லக்கூடாது என விரும்புகிறோம் என்றும் உத்தரவில் நீதிபதிகள் பதிவுசெய்துள்ளனர்.

விளக்கு ஏற்றுவதற்கான வசதி கொண்ட அந்த கல்தூண் தமிழில் தீபத்தூண் என அழைக்கப்படுகிறது என்றும், அது உரிமையியல் நீதிமன்றத்தால் தேவஸ்தானத்தின் சொத்தாக அறிவிக்கப்பட்ட பகுதியிலேயே உள்ளது என்றும், அதனால் வக்பு வாரியத்திற்கு அதன்மீது எந்த உரிமையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணையின்போது வக்ஃபு வாரியம் தரப்பில் விளக்குத்தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற தவறான வாதம் முன்வைக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதுதொடர்பான வழக்கில் சிக்கந்தர் பாதுஷா தர்காவிலிருந்து 15 மீட்டர் தூரத்தில் தேவஸ்தானத்தின் வேறு எந்த பகுதியிலும் தீபம் ஏற்றும் இடத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த உத்தரவின் நோக்கம் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும் என குறிப்பிட்டுள்ளனர்.

மலை உச்சியில் அமைந்துள்ள அந்த கல்தூண் தர்கா அமைந்துள்ள உச்சியை விட தாழ்வான இடத்திலும், வேறு ஒரு உச்சியிலும் அமைந்து இருப்பதால், அது தீபம் ஏற்றுவதற்கான சிறந்த இடம் தான் என்றும், மதச் சடங்குகள் எப்போதும் ஒரு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், கார்த்திகை திருவிழாவின் போது உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவதே வழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், உயரமான இடத்தில் தீபம் ஏற்றும் வழக்கம் இருந்து, அதற்கான இடம் தேவஸ்தானத்தின் சொத்து எல்லைக்குள்ளேயே இருக்கும்போது, பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மறுப்பதற்கு தேவஸ்தானத்திற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

1958ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதிகள், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்திய அச்சம் அவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட கற்பனை பூதமே தவிர வேறில்லை என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்துவதற்காகவே இவ்வாறு கூறப்படுகிறது என்றும் தங்கள் அதிருப்தியை பதிவுசெய்துள்ளனர்.

தேவஸ்தானத்தில் இருந்து சிலர் மட்டும் விளக்கேற்றுவதற்காக தூணுக்கு செல்லவும், பக்தர்கள் மலையடிவாரத்தில் இருந்து வழிபடவும் அனுமதிப்பது என்பது நிர்வகிக்க முடியாத ஒரு விஷயம் அல்ல என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர், இதனால் பிரச்சனை ஏற்படும் எனக் கூறுவது சட்டம் ஒழுங்கை பராமரிக்க மாவட்ட நிர்வாகத்தால் இயலாத நிலையை வெளிப்படுத்துவதாகவோ அல்லது சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க தயங்கும்
நிலையை காட்டுவதாகவோ இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நீதிமன்றத்தின் கருத்துப்படி இரு சமூகங்களுக்கிடையே வேறுபாட்டை குறைக்க இதனை ஒரு வாய்ப்பாக தமிழ்நாடு அரசு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.

அமைதியான பேச்சுவார்த்தை மூலம், இரு தரப்பினருக்கு இடையேயான இடைவெளியை குறைத்திருக்கலாம் என்றும், ஆனால் கடந்த காலங்களில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டங்கள் அவர்களுக்கிடையே பிளவை தான் அதிகரித்துள்ளன என்றும் அரசு தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனிவரும் காலங்களில் ஒவ்வொரு சமூகத்திற்குரிய விழாக்கள் நடைபெறும் போதெல்லாம், தற்போது வழங்கப்படும் உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தினால், இங்கு சண்டை இல்லாமல், ஒளி மட்டுமே இருக்கும் என நம்புகிறோம் என்று நீதிபதிகள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

தீபத்தூணில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற வேண்டும் என்றுன், திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதி என்பதால் அங்குள்ள நினைவுச் சின்னங்களை பாதுகாக்க தேவையான மற்றும் பொருத்தமான நிபந்தனைகளை இந்திய தொல்லியல் துறை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு தேவஸ்தானம் தங்களது குழுவின் மூலமாக தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தேவஸ்தான குழுவினருடன் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும், எத்தனை பேர் செல்லலாம் என்பது தொடர்பாக தொல்லியல் துறை மற்றும் காவல் துறையுடன் தேவஸ்தானம் ஆலோசனை செய்து நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் G.ஜெயச்சந்திரன், K.K.ராமகிருஷ்ணன் ஆகியோர், இவை அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவுகளின் அடிப்படையில் மேல்முறையீடு தொடர்பான 20 வழக்குகளையும் முடித்துவைத்தும் உத்தரவிட்டனர்.
[06/01, 13:05] Sekarreporter: 🙏

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com