Msrj bench stayed காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை*. *சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு*
[07/08, 12:41] Sekarreporter: http://youtube.com/post/UgkxD5MgE2wfYFuV72gCKf1i8Aiki0J_71Zv?si=tK8ls0TpM3AwRK2R
[07/08, 12:41] Sekarreporter: *காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை*.
*சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு*

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தாமரை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய எஸ்சி எஸ்டி புகார் சம்பந்தமாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக புலன் விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கோட்டக்குப்பம் காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மீது இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என கண்டித்து புலன் விசாரணை அதிகாரி டிஎஸ்பி சுனிலை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு கடந்த வாரம் வந்தபோது கிரிமினல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மீது எப்படி சென்னை உயர்நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்ய முடியும். இது உச்ச நீதிமன்றத்தில் அல்லவா மேல்முறையீடு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த அரசு கூடுதல் பப்ளிக் ப்ராசிட்டர் ராஜ் திலக் இந்த வழக்கு கிரிமினல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவாக இருந்தாலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவு கிரிமினல் வழக்குகள் என்கிற வரையறைக்குள் வராது என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாதிட்டார். அந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, பாதிக்கப்பட்ட டி.எஸ்.பி சுனில் தாக்கல் செய்த மனுவையும் இணைத்து இரு வழக்குகளையும் இன்று விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டிருந்தனர்.
இரு வழக்குகளும் இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ராஜ் திலக் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்ட விதிகளுக்கு முரண்பாடானது. எனவே, இடை நீக்கம் செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு முன்தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடினார். ப்ப்ளிக் ப்ராஸிக்யூட்டரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் கிரிமினல் வழக்கில் போடப்பட்ட உத்தரவை எதிர்த்து இரு அமர்வு கொண்ட நீதிபதிகளிடம் மேல் முறையீடு செய்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை பெற்றிருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடை பெற்றமைக்கு தமிழக அரசுக்கும், ப்ப்ளிக் ப்ராஸிக்யூட்டர் அசன் முகம்மது ஜின்னாவுக்கும் காவல்துறையினர் பலரும் நன்றி தெரிவித்தனர்.