Mhc only virtual online மட்டும் விசாரணை வழக்குகள்e mail or box post செய்யனும் இன்று முதல்

[1/3, 06:37] Sekarreporter 1: R.O.C.NO.23991-C/2020/C3

NOTIFICATION

Owing to spurt in Omicron variant of Covid-19 cases, the Honourable The Acting Chief Justice has issued following directions regarding functioning of the Principal Seat of Madras High Court, Madurai Bench of Madras High Court and all Subordinate Courts in the District Judiciary in the State of Tamil Nadu and Union Territory of Puducherry with effect from 03.01.2022:

a) Notification No.334/2021 dated 27.12.2021 is kept in abeyance for the present.
b) Notifications dated 15.07.2021, 27.08.2021 and 09.11.2021 (R.O.C.No.23991-C/2020/C3) are also kept in abeyance for the present.
c) Physical hearing and hybrid option before all Hon’ble Courts shall remain suspended. All hearings before all Hon’ble Courts shall be through virtual mode only.
d) Filing of case papers, copy applications, returning / representing the case papers and receiving the order copies in emergent matters alone will be through e-mail and in exceptional cases, it shall be through the respective counters / drop boxes provided for the said purpose, subject to strict adherence to Covid-19 safety protocol.
This arrangement shall be operational from 03.01.2022 (Monday) for the present, until further orders

HIGH COURT, MADRAS s/d. P. DHANABAL
DATED : 02.01.2022 REGISTRAR GENERAL
[1/3, 06:39] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், இன்று துவங்க இருந்த நேரடி விசாரணை தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2020 மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக உயர் நீதிமன்றம் மூடப்பட்டு, அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள், தங்கள் வீடுகளில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு வந்து வழக்குகளை விசாரித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காணொலி காட்சி மூலமும், நேரடியாகவும் என கலப்பு விசாரணை முறை அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், நாளை முதல் வழக்குகள் நேரடியாக மட்டும் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர் 27ம் தேதி அறிவித்திருந்தது.

21 மாதங்களுக்கு பின் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை துவங்க இருந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, நாளை முதல் துவங்க இருந்த நேரடி விசாரணை தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, காணொலி காட்சி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், நேரடி மற்றும் கலப்பு விசாரணை முறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகள் தாக்கல், உத்தரவு நகல் கோரிய விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் எனவும், தவிர்க்க முடியாத நிலையில் குறிப்பிட்ட கவுண்டர்கள் அல்லது பிரத்யேக பெட்டிகளில் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like...