March 30th madras high court news
[3/29, 08:01] Sekarreporter: ஞானவேல்ராஜாவுக்கு எதிராக சிவகார்த்திகேயன் வழக்கு
ரூ. 4 கோடி சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…
சம்பள பாக்கியை செலுத்தும் வரை ஜி.வி.பிரகாசின் ரிபெல், விக்ரமின் சீயான்61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக்கின் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்ய ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரிக்கை…
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ. 15 கோடியில் ரூ. 11 மட்டுமே கொடுத்துள்ளதாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை ஞானவேல்ராஜா வருமான வரித்துறையில் செல்லுத்தவில்லை. அதை செலுத்தவும் உத்தரவிட வேண்டும் – சிவகார்த்திகேயன்
மார்ச் 31ல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு
[3/29, 09:57] Sekarreporter: 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை, நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள வழக்கில், தனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
11 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடுமென தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து முன்னரே வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
எனவே 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார்.
அவ்வாறு செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் சீயான்61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாளை மறுதினம் (மார்ச் 31) வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[3/29, 11:23] Sekarreporter: சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளில், சம்பந்தப்பட்ட காலத்தில் மேயர்களாக இருந்தவர்களையும், அதிகாரிகளையும் சேர்க்க கோரி வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர்கள் கோரியதில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2014 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சென்னை மற்றும் கோவை மேயர்களாக பதவி வகித்தவர்களையும், அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிடக் கோரி நேர்வழி இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், டெண்டர்களுக்கு ஒப்புதல் அளித்து மேயர்கள் தான் கையெழுத்திட்டுள்ளதாகவும், அவர்கள் வழக்கில் சேர்க்கப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், சம்பந்தப்பட்டவர்களை சேர்க்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எந்த நடைமுறையும் தெரிந்து கொள்ளாமல், எல்லாவற்றுக்கும் பொது நல வழக்கு தொடர்வது என்பது நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதாகும் எனவும், கோரிக்கை மனுக்களை பரிசீலிக்கும்படி உத்தரவிடக் கூடாது என உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறிய நீதிபதிகள், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர்.
இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[3/29, 14:53] Sekarreporter: Sastra adjourned to ஏப்ரல் 5 for earlier bench TRJ SKSKJ
[3/29, 14:53] Sekarreporter: Meera Mithun adjourned ஏப்ரல் 1
[3/29, 16:55] Sekarreporter: நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஏப்ரல் 1 தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், தமிழ்செல்வி என்ற நடிகை மீரா மிதுன், உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையின் போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (25/03/2022) கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் ஏப்ரல் 4 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனிடையே தமிழ்செல்வி என்ற மீரா மிதுன் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு விசாரணை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இதனையடுத்து வழக்கை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.