Madurai Asoke Bci: ஒரு ருபாய் நன்கொடையும், பார்கவுன்சிலும்…
பார்கவுன்சிலும்…
இன்றைய Times of India, சென்னை பதிப்பில் முதல் பக்கத்தில் நான்கு column, நாலாம் பக்கத்தில் இரண்டு column , புதிய தலைமுறையிலும் ஒரு பரபரப்பான செய்தி….
தமிழக பார்கவுன்சிலுக்கு covid19 நிவாரண நிதிக்கு இரண்டு வழக்கறிஞர்கள் தலா ஒரு ருபாய் வழங்கியுள்ளனர். இது கேலிக்குரியது என்பது மாதிரியான செய்திகள் பரப்பப்படுகிறது.
விரிவாக பேசும் முன் முக்கியமான ஒன்று :
வழக்கறிஞர் தருவது ஒரு ரூபாய் என்ன, அதற்கும் குறைந்த பணம் கொடுத்தாலும் வாங்க வேண்டியது பார்கவுன்சிலின் தலையாய கடமை.
அய்ந்து லட்சம் எவ்வளவு மகிழ்வுடனும் மரியாதையுடனும் பெறப்பட்டதோ அதே மகிழ்ச்சியும் மரியாதையுடனும் தான் நீங்கள் தரும் தொகைகளை நன்றியுடன் பெறப்படுகிறது. இதில் சிறிதென்று பெரிதென்று ஏதுமில்லை.
இது உங்கள் உழைப்பு, உங்கள் பணம், அதை அருங்கொடையாக நீங்கள் தரும் போது அதை மிகுந்த நன்றியுணர்வுடன் பார்கவுன்சில் பெறுகிறது. உங்கள் பணம் சிரமப்படும் ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் போய் சேரும் என்ற உங்கள் நம்பிக்கையின் மீதான மரியாதையும் மகிழ்ச்சியும் அது.
ஒரு ருபாய் நன்கொடை உண்மையா… ??
அந்த வழக்கறிஞர்கள் ஒரு ருபாய் வழங்கியது தாங்கள் அனுப்பும் பணம் கணக்கில் ஏறுகிறதா என்பதை பரிசோதிக்கவே.
இதை கூட புரியாதவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்பதை நம்ப முடியவில்லை.
இதன் பின்னணி அரசியல் தெரியாததல்ல.
அதே எண்ணில் எத்தனை முறை பணம் ஏறியுள்ளது என்பதை கணக்கிட்டால் மூவாயிரம் ருபாய்க்கு மேல் அந்த எண்ணிலிருந்து பணம் ஏற்றப்பட்டுள்ளது.
அந்த பத்திரிக்கை பிரகஸ்பதிகளுக்கு நன்றி.
பார்கவுன்சிலின் நன்கொடை அழைப்புகளுக்கு முதல் பக்கத்தில் இலவச விளம்பரம் அளித்தமைக்கு.
நிவாரணம் கோரும் வழக்கறிஞர்களுக்கு, நிபந்தனைகளற்ற வகையில், குறைந்த பட்ச தகுதிகளை மட்டும் நிர்ணயம் செய்து அதற்கான செயலியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அருளாளர்களே,
இந்த சூழலில் உங்களிடம் பணம் கேட்பது கடினமாகத்தான் உள்ளது. ஆனால் சூழல் ஏற்புடையதாக இல்லை. நம் உறவுகள் படும் சிரமம் நீங்கள் அறியாததல்ல…
உங்களின் அருட்கொடை நிச்சயம் நம் உறவுகளின் உள்ளத்தில் நம்பிக்கையை துளிர்க்க வைக்கும்.
உங்கள் கொடையின் அளவு முக்கியமில்லை இயன்றவர்களின் பங்களிப்பே முக்கியம்.
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் வழக்கறிஞர் உறவுகள் என் துணை நிற்கும் என ஒவ்வொரு வழக்கறிஞரும் நம்பிக்கை கொள்ள செய்ய வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.
பெரிய சங்கங்கள் தங்களது உறவுகளுக்கு பாராட்டதக்க வகையில் பணமாகவோ பொருளாகவோ அளித்து வருகின்றனர், ஆனால் பின்தங்கிய சில பகுதிகளில் பலருக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. அனைத்து மாவட்ட உறவுகளுக்கும் நிவாரணம் போய் சேரும் வழிவகையை தான் பார்கவுன்சில் மேற்கொண்டுள்ளது.
கடைக்கோடியில் இருக்கும் வழக்கறிஞருக்கும் துணை நிற்பது
நம் கடமை.
அருட்கொடையாளர்களே உங்களை இரு கரம் கூப்பி வேண்டுகிறோம் மகத்தான இப்பணியில் உங்கள் கடமையும் பங்களிப்பும் அவசியம்.
உங்கள் கொடை, கடைசி மூலையில் இருக்கும் நம் உறவுக்கும் போய் சேரும்.
உங்களாலியன்ற பங்களிப்பை தாருங்கள்.
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம்:
Name of the Account : Bar Council of Tamilnadu and Puducherry (BCTNP) Advocates Relief Fund, Name of Bank – Indian Bank, Branch – Madras High Court, Account No – 6873278505, IFSC Code -IDIB000M157.
பார்கவுன்சில் நமக்கானது..
நம் நலனுக்கானது ..
என்பதை நிருபிப்போம்.
பா.அசோக்.
[4/19, 21:31] Madurai Asoke Bci: Co chairman, bar council of Tamil nadu and Puducherry
[4/20, 06:52] Sekarreporter: 🌹