Madras high court orders november 20

[11/20, 15:00] Sekarreporter 1: வாகன விபத்துகளில் சிக்கி ஊனச் சான்று வாங்க வருபவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பது குறித்து நான்கு வாரத்தில் முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சி. ஜெகதீசன் என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி, அதில் இழப்பீடு கோரி வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தாக்கல் செய்வதற்காக மருத்துவ வாரியத்தின் ஊன சான்று பெறும் நடைமுறை காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, நரம்பியல் பிரிவில் 30 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின்னர், 40 சதவீதம் நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சான்றளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஊனச்சான்று பெறுபவர்களுக்கான தனி வார்டு உருவாக்க கோரியும், சான்று வழங்குவதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்கக்ப்கோரியும் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் ஆஜராகி, விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட குறைபாட்டை நிர்ணயிக்க்கும் ஊனச்சான்று கோருபவர்களை தங்கவைக்க தனி வார்டு இல்லாததால், தரையில் அமர்த்தப்படுவதாகவும், இதனால் மனுதாரர் வருமானம் இழந்து குடுமத்தினர் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கோவிந்தசாமி மனுதாரரின் கோரிக்கை மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதத்திற்கு பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் தான் பாதிக்கப்பட்டதோடு நிற்காமல், தன்னைப் போன்ற வேறு யாரும் பாதிக்கக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்து இருப்பதாகவும், அவர்களை கருத்தில் கொண்டு சிறந்த மருத்துவமனையாக செயல்படக்கூடிய ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஊனச் சான்று வாங்க வருபவர்களுக்காக தனி வார்டை அமைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தனி வார்டு அமைப்பது குறித்து 4 வாரத்தில் முடிவெடுத்து, அதை வரும் ஜனவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
[11/20, 17:14] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது தொடர்பான பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை அடுத்த பொத்தூர் கிராமத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை பட்டா எந்தெந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்களைக் கேட்டு பொன்னேரி தனி தாசில்தாருக்கு இ.குமார் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பினார். அந்த மனுவுக்கு உரிய பதிலை பொது தகவல் அதிகாரி தரவில்லை என மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மனுவில் கேட்கும் பகுதியில் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை 7 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென பொன்னேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தனி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், தமிழகம் முழுவதும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களில் இதுவரை யார் யாருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியலை மாவட்ட வாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ம், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை 2 மாதங்களில் ஆணையத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அன்றைய தினம் நடைபெறும் கானொலி விசாரணைக்கு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் மற்றும் மனுதாரர் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...