Madras high court orders nov 28

[11/29, 07:48] Sekarreporter 1: வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை வகுக்க கோரியும், உரிய அனுமதியின்றி பைக்-களை மாற்றியமைத்து பயன்படுத்துவதை தடுக்கக் கோரியும் வழக்கு

நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் வழக்கு

இதுபோல வாகனங்களை வேகமாக இயக்குவது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், பாதசாரிகளுக்கும், பிற வாகன ஓட்டுனர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது – மனு
[11/29, 07:48] Sekarreporter 1: அதிவேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை வகுக்கவும், உரிய அனுமதியின்றி பைக்-களை மாற்றியமைத்து பயன்படுத்துவதை தடுக்கவும் கோரிய வழக்கில் தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்கியது, வாகனங்களின் வடிவமைப்பை மாற்றியது, சைலன்சர்களை மாற்றி அதிக சத்தத்துடன் இயக்கியது என பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோல வாகனங்களை வேகமாக இயக்குவது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல், பாதசாரிகளுக்கும், பிற வாகன ஓட்டுனர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், முறையாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதியைப் பெறாமல் வாகனங்களில் மாற்றங்கள் செய்து இயக்குவது விபத்துக்களுக்கு வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பதை மாற்றி, அபாயகரமான வகையில் இயக்குவதை தடுக்கவும், வேகமாக வாகனங்கள் ஓட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, அமர்வு, நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
[11/29, 07:48] Sekarreporter 1: சென்னை- பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பபெறாவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, ஒரு சிலர் போலி ஆவணங்களை காண்பித்து அரசிடம் 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றுள்ளதாக கூறி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தின் உண்மையான உரிமையாளருக்கு தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா,, வட்டாட்சியர் மீனா ஆகியோர் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு ஆஜராகினர்.

அப்போதைய மாவட்ட ஆட்சியர் பொன்னையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இழப்பீடு வழங்குவதற்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தொடர்பில்லை என்றும், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் நில கையகப்படுத்தும் மாவட்ட வருவாய் அதிகாரிக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார்.

சி பி சி ஐடி காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை நான்கு கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அப்போது நீதிபதி தண்டபாணி, போலி ஆவணங்களை காண்பித்து இழப்பீடு பெற்றவர்கள் தொடர்பாக சிபிசிஐடி நடத்திவரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், இழப்பீடாக் கொடுக்கப்பட்ட தொகை பொதுமக்களுடையது என்றும் அந்த பணத்தை முறைகேடாக பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் .பொதுமக்களுடைய பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த நீதிமன்றத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இதில் கருணை காட்ட முடியாது என்றும், தவறாக கொடுக்கபட்ட இழப்பீட்டு தொகையை திரும்ப பெறாவிட்டால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்ப்படும் என்றும் எச்சரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[11/29, 07:48] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்காக கோவில் நிலத்தை காலவரம்பின்றி குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர்
கோயிலுக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,
கோவில் நிலத்தை குத்தகைக்கு
எடுப்பதற்கு அரசுக்கு அனுமதி அளித்த போதும்,
ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கோவில் நிலத்தை குத்தகைக்கு கொடுப்பது தொடர்பான அரசாணையில் எந்த காலவரம்பும் குறிப்பிடப்படவில்லை எனவும், இது அறநிலையத் துறை சட்டத்துக்கு விரோதமானது என மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் வாதிட்டார்.

இதையடுத்து காலவரம்பு இல்லாமல் குத்தகைக்கு விடுவது தொடர்பாக அரசாணை பிறப்பித்தது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[11/29, 07:48] Sekarreporter 1: காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், ஆறு போலீசாருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். மறுநாள் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலக காலனி காவலர் பவுன்ராஜ், தலைமை காவர் முனாப், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஜெகஜீவன்ராம், சந்திரகுமார், ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலை குற்றச்சாட்டு மற்றும் வன்கொடுமை தடைச் சட்டப்பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் சிபிசிஐடி போலீசார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி தாக்கல் செய்துள்ளார்.

127 சாட்சிகளின் வாக்கு மூலங்கள், 290 ஆவணங்களுடன் சேர்த்து, 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 64 சான்று பொருட்கள் குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
[11/29, 07:48] Sekarreporter 1: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக யுடியூபர் கார்த்திக் கோபிநாத் வசூலித்த தொகையை விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்ற மிலாப் செயலி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த 30 லட்ச ரூபாயை கோவில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்க கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மிலாப் செயலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கூறினார்.

கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், திருப்பணிக்கு தேவைப்படும் பணத்தை அளிக்க நன்கொடையாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த தொகையை விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்ற மிலாப் செயலி நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, நன்கொடையாளர்கள் குறித்த விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

பின்னர், இந்த வழக்கை
கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டார்.
[11/29, 07:48] Sekarreporter 1: காசோலை மோசடி வழக்கில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் பேரன் துஷ்யந்த் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான அக்‌ஷய் சரின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் துஷ்யந்தின் மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

வியாபார நடவடிக்கைகளுக்காக துஷ்யந்த் சார்பில் தலா 15 லட்சம் ரூபாய்க்கான இரண்டு காசோலைகளை கடந்த 2019ம் ஆண்டு அளித்ததாகவும், ஆனால் போதிய பணம் இல்லாததால் இரண்டு காசோலைகளும் திரும்பி வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரிந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு காசோலை அளித்ததாகவும், இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு பதிலளிக்காததுடன், தங்களது பணத்தையும் திரும்ப அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே ராம்குமாரின் மகன் துஷ்யந்த், துஷ்யந்த்தின் மனைவி அபிராமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகன் கொடுக்க வேண்டிய பணத்திற்கு பொறுப்பேற்பதாக ராம்குமார் உத்தரவாதம் அளித்துள்ளதால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துஷ்யந்த், அபிராமி, ராம்குமார் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிற்ப்பித்து, வழக்கு விசாரானையை பிப்ரவரி மாதம் 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

You may also like...