Madras high court orders january 25th day

[1/24, 11:16] Sekarreporter 1: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காவல்துறையினருக்கு எதிராக மாநில அளவில் புகார் அளிக்க உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமையிலான புகாரும்,
மாவட்ட அளவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான ஆணையமும் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாறாக, மாநில அளவிலான புகார் ஆனையத்திற்கு உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏ.டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மாவட்ட அளவிலான புகார் ஆனையத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட ‘காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்ட’ விதிகளை சட்டவிரோதமானது என அறிக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைகக்கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த வாரம் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே சுமூக உறவு நிலவும் வகையில் புதிய காவல் ஆணையத்தை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அமைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உள்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பதற்கான விதிகளை வகுத்துள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க விதிகளில் திருத்தம் செய்யபட்டதா என தமிழக அரசு ஜனவரி 31ஆம் தேதி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

அவ்வாறு விதிகள் திருத்தப்பட்டிருந்தால் அதுதொடர்பான விவரங்களையும், நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.
[1/24, 12:14] Sekarreporter 1: தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு, நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது குறித்து திட்டம் வகுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் கே.பாரதி தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 391 ரூபாய் மட்டும் ஊதியமாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் நிலையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துய்மைப் பணியாளர்களுக்கு 17 ஆயிரத்து 23 ரூபாய் வழங்கப்படுவதாகவும், சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில், இந்தத் திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்களுக்கும் உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், ஒப்பந்த அடிப்படையிலோ, தேசிய திட்டத்தின் கீழோ நியமிக்கப்படும் பணியாளர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது என வலியுறுத்தினார்.

மேலும், நலிந்த பிரிவினரை எப்படி நடத்துகிறதோ அந்த அடிப்படையில் தான் நாட்டின் சிறப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது என மகாத்மா காந்தி கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் அளிப்பது குறித்த திட்டத்தை, 12 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என்றும், அதுவரையில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
[1/24, 15:27] Sekarreporter 1: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி செய்ததாக கைதான முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் மணி என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதற்காக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் 17 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியிடம் உதவியாளராக மணி சில ஆண்டுகளாக இருந்துவந்ததை நம்பி பணம் கொடுக்கப்பட்ட நிலையில், வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தை மோசடி செய்துவிட்டதாக சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையிடம் தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். மேலும் மணிக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார்.

தமிழ்ச்செல்வன் தவிர்த்து மேலும் சிலரும் உதவியாளர் மணி மீது போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். இதுதொடர்பாக மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து,
தலைமறைவாக இருந்த மணியை  சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மணி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில் தன் மீதான புகார் பொய் புகார் என்றும், தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தனக்கு நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது .
அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, எடப்பாடி முன்னாள் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[1/24, 16:00] Sekarreporter 1: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் உட்பட 12 பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது ..

நீட் தேர்வை எதிர்த்து மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தி நகரில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இதையடுத்து,தி நகர் போலீசார் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் உமாபதி,தலைமை நிலைய செயலாளர் தபசிகுமரன் உள்ளிட்ட 12 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், உருவ பொம்மை எரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் .மேலும் சென்னை சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இதை எதிர்த்து உமாபதி உள்ளிட்ட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188 பிரிவில், காவல்துறை நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது,மாஜித்திரேட்டிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் நடைபெற்ற போராட்டம் தான் என்றும் இது ஒரு சட்ட விரோத போராட்டம் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராக காவல்துறை பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[1/24, 16:26] Sekarreporter 1: [1/24, 16:14] Sekarreporter 1: [1/24, 16:12] Sekarreporter 1: ஜனவரி 26 sc கெடு முடிகிறது
[1/24, 16:12] Jounalist: 27
[1/24, 16:20] Sekarreporter 1: சுப்ரீம் கோர்ட் கெடு இருக்கும்போது நாங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் நீங்கள் ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் செல்ல நாங்கள் எப்படி வற்புறுத்த முடியும்
[1/24, 16:20] Sekarreporter 1: 🙏🏽
[1/24, 16:26] Sekarreporter 1: சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் செல்ல நாங்கள் எப்படி வற்புறுத்த முடியும்
[1/24, 16:20] Sekarreporter 1: 🙏🏽
[1/24, 16:26] Sekarreporter 1: [1/24, 16:25] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1485566920791568392?t=b1ify5Ao95w8ojJm3wP0yA&s=08
[1/24, 16:25] Sekarreporter 1: உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு தான் அதிகாரம் உள்ளது மீண்டும் acj கூறுகிறார்
[1/24, 16:30] Sekarreporter 1: உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு வக்கீல்கள் செல்ல விரும்புகிறீர்களா இல்லை இங்கு வழக்கை நடத்த விரும்புகிறீர்களா
[1/24, 16:40] Sekarreporter 1: பல மாநிலங்களில் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கையுடன் தேர்தல் நடத்தும் பொழுது தமிழகத்தில் மட்டும் ஏன் அப்படி நடத்தவில்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது தலைமை நீதிபதி கருத்து
[1/24, 16:45] Sekarreporter 1: கொராணா விதிமுறையை பின்பற்றித்தான் தேர்தல் நடத்த உத்தர விடுவோம்
[1/24, 16:47] Sekarreporter 1: தேர்தலை தள்ளிவைக்கை கோரி மனுதாரர்கள் ஏன் உச்ச நீதிமன்றதை நாடக்கூடாது – பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு

கொரோனா கட்டுப்பாடுகளை அனைத்து கட்சிகளும் பின்பற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதற்கு இருமல் சளிக்கான மருத்துவத்தை மருத்துவர்கள் பரிந்துரைத்ததும் ஒரு காரணம் – நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளதால் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. அங்குதான் அணுக வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. 5 மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடத்தப்படுகிறது. தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் – நீதிபதிகள்

மனுதாரர்கள் அனைவரும் சேர்ந்து உச்ச நீதிமன்றம் செல்வதென்றால் செல்லாம். இங்குதான் விசாரிக்க வேண்டுமென்றால் விசாரித்து உத்தரவிடவும் தயார் – நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற வழக்கில் தாங்கள் இல்லாததால் அங்கு செல்லவில்லை. கால அவகாசம் கோரி தேர்தல் ஆணையம் கோரிக்கை வைக்கலாம் – மருத்துவர் நக்கீரன்

தமிழக முழுதும் 30000 ஆயிரம் தெருக்கள் கொரோனா பாதிப்பால் அடைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் கெடு விதித்த போது கொரோனா பாதிப்பு தீவிரமாக இல்லை – நக்கீரன்

உரிய முன்னெச்சரிக்கையுடன் சட்டமன்ற தேர்தல்களே நடத்தப்பட்டு வரும்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்பது வியப்பை ஏற்படுத்துகிறது – நீதிபதிகள்

மருத்துவர் என்ற முறையில் கொரோனா கட்டுபாடுகளை பிரச்சாரங்களில் எவ்வாறு பின்பற்ற வேண்டுமென தவிர தள்ளிவைக்க கோரக்கூடாது – நீதிபதிகள்
[1/24, 16:53] Sekarreporter 1: வழக்கு நாளை ஒத.தி வைப்பு
[1/24, 17:25] Sekarreporter 1: கிராமப்புறங்களில் மதுபானக் கடைகள் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கலால் வரித்துறை தான் வழங்க முடியும்…..

விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மஹாராஷ்டிராவில் மதுபான கடைகள் அமைக்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை
கிராம சபைக்கு வழங்கி சட்டம் இயற்றியதுபோல, தமிழகத்திலும் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் – மனுதாரர்

தங்கள் கிராமத்தில் மதுக்கடைகள் வேண்டாம் என கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்ற முடியாது, ஆனால் மூட வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைக்க அதிகாரம் உள்ளது – நீதிபதிகள்

டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதற்கு தடை விதிப்பதற்கு கிராம சபைகளுக்கு
அதிகாரம் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கியதால் 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வில் விசாரணை

பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதிகள்
சி.வி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு

வழக்கு விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு
[1/24, 17:30] Sekarreporter 1: கிராமப்புறங்களில் மதுபானக் கடைகள் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கலால் வரித்துறையிடம் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதற்கு தடை விதிப்பதற்கு கிராம சபைகளுக்கு
அதிகாரம் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கியதை அடுத்து, இந்த வழக்குகளை மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதிகள்
சி.வி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி,
மஹாராஷ்டிராவில் மதுபான கடைகள் அமைக்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை
கிராம சபைக்கு வழங்கி சட்டம் இயற்றியதுபோல, தமிழகத்திலும் சட்டம் இயற்ற
உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

காந்தியடிகளின் கொள்கையை பின்பற்றும் கிராமத்தில் மதுக்கடைகள் வேண்டாம் என்றால், அவற்றை துவங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற கிராம சபைக்கு அதிகாரமில்லையா என கேள்வி எழுப்பினார்.

கடைகள் மூடப்பட வேண்டுமென்றாலும் அரசின் வருவாய் ஆதாரமாக இருப்பதால் முழுமையாக அரசு கைவிடாது என்றும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், கிராமசபை தீர்மானம் தொடர்பாக இதுவரை விதிகள் இல்லை என்றும், மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்தனர்.

கடைகளை அமைப்பதில் முடிவெடுக்க கிராம சபைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதால், கடைகள் துவங்குவது தொடர்பாக பரிந்துரை வழங்க பஞ்சாயத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தனர்.

தங்கள் கிராமத்தில் மதுக்கடைகள் வேண்டாம் என கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்றும், மூட வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைக்க அதிகாரம் இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கிராமங்களில் மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக கலால் வரித் துறை முடிவெடுக்கும் வகையில் விதிகளை திருத்த வேண்டும் எனவும், எங்கு, எவ்வளவு தூரத்தில் கடைகள் துவங்குவது என்பது குறித்து கலால் வரித்துறை தான் தீர்மானிக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விரைவில் விதிகள் கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியதை அடுத்து, மாநில அரசின் விதிகளில் திருத்தம் கொண்டுவருவது குறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[1/24, 17:58] Sekarreporter 1: பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் 500 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறி, சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

சுமார் 1,297 கோடி செலவில் 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 21 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருட்களே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தரம் குறைந்த மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி மற்றும் ஊசி போன்ற அபாயகரமான பொருட்கள் இருந்தது குறித்தும், பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது குறித்தும் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில், விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்காமல், 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகவும், போலீஸ் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

மேற்கொண்டு பொங்கல் பரிசு வழங்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

[1/24, 18:19] Sekarreporter 1: சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து வரும் வெள்ளிக்கிழமை தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி ஐ.ஹெச்.சேகர் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரிகள் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜராகியிருந்தனர்.

விசாரணையின்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது சம்பந்தமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு அமல்படுத்தாமல் இருப்பதால்தான் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆன மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜனவரி 28) வரை அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்தனர். மேலும் அன்றைய தினமும் நீதிமன்ற அவமதிப்பு புகாருக்குள்ளான அதிகாரிகள் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
[1/24, 19:36] Sekarreporter 1: கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு…!

உச்சநீதிமன்றம்*

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதகாலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டுமென கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் 4ம் தேதி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த கூடுதலாக 7 மாதம் கால அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது .

இந்த மனு கடந்த செப்டம்பர் 20ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,

நாடாளுமன்ற தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தும்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி வழக்கு தொடர்ந்த மனுதாரர் சங்கருக்கு தேர்தல் நடத்த கால வகாசம் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா என்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனைதொடர்ந்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மனுதாரர் சங்கர் தரப்பு,

உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் வழங்குவதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என தெரிவித்திருந்தார்..

அதேவேளையில், விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும், அதனால் தேர்தலை நடத்துவதற்கு ஏப்ரல் 2022 இறுதிவரை காலஅவகாசம் வழங்க வேண்டும். மேலும்,
தமிழகத்தில் இன்னும் கொரோனா பாதிப்பு இருப்பதாலும்,
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் பருவமழையை சுட்டிக்காட்டியும் கால அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் கடந்த செப்டம்பர் 27 அன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் காலஅவகாசம் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், நீங்கள்தான் தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடுத்தீர்கள், தற்போது கால அவகாசம் வழங்கலாம் எனக் கூறுகிறீர்கள், என்னதான் நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும், தலைமை நீதிபதி உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்க மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கக்கூடிய காரணங்கள் ஏற்கும்படி இல்லை, எனினும் இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்குவதாகக்கூறி மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டனர்.

இன்றைய மேட்டர்…!

இந்நிலையில் மீண்டும் 4 மாத அவகாசம் வழங்கக்கோரி மனுதாரரான சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக இடைக்கால மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் தற்போதைய சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் கரோனா தாக்கம் மேலும் அதிகரித்து விடும். எனவே 4 மாதம் அவகாசம் வழங்க வேண்டும், என அதில் கோரியுள்ளார்.
[1/24, 19:37] Sekarreporter 1: இந்த வழக்கில் மேலும். 4 மாதம் அவகாசம் கேட்டு சங்கர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்

You may also like...