Madras high court orders april 6

[4/5, 12:01] Sekarreporter: ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்டு

கோர்ட்டு உத்தரவு

 

சென்னை, ஏப்.5-

பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு கடந்த 2016-ம் ஆண்டு பேட்டி அளித்தனர்.

அப்போது, பைனான்ஸ்சியர் முகுந்த் சந்த போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.

அவர் இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு நேற்று (திங்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.செல்வமணி, அருள் அன்பரசு ஆகியோர் ஆஜராக வில்லை. அவர்கள் தரப்பு  வக்கீலும் ஆஜராக வில்லை.

இதையடுத்து அவர்கள் இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வரக்கூடிய  பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்ணரவு பிறப்பித்தார். விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

….,
[4/5, 12:30] Sekarreporter: சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறி புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சாலையில் ஆக்கிரமித்து நடத்தப்படும் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டாலும், மீண்டும் முளைத்து விடுவதாக தெரிவித்தார்.

நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எனவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோரினார்.

வியாபாரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, 15 மாற்று இடங்களை அடையாளம் கண்டு தெரிவித்தும், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவில், என்.எஸ்.சி. போஸ் சாலை வியாபார பகுதி அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டு, நிரந்தர தீர்வு காண்பதற்கு அரசு ஆறு வார கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[4/5, 12:50] Sekarreporter: குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு தேவைப்பட்டால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் அமர்வு உத்தரவு

இது ஒரு சாதாரண வழக்கு. இதற்காக மதன் 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார் : மதன் தரப்பு

மதனுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. காவல்துறையினர் மதனுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை வழங்காமல் வெறுமனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவதாக குற்றச்சாட்டு

அரசால் பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் VPN தொழில்நுட்பம் மூலம் தவறாக மதன் பப்ஜியை பயன்படுத்தியுள்ளார் : நீதிபதிகள்

வழக்கு விசாரணை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைப்பு
[4/5, 13:12] Sekarreporter: பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்களாக அரசுத்துறை அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காக மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக, இந்திய சட்டப் பணிகள் அதிகாரிகளாக உள்ளவர்களை நியமிக்கும் வகையில் 2016ம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் வசந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எந்த சட்ட அனுபவமும் இல்லாதவர்களை நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பாயங்களின் நீதித்துறை உறுப்பினர்களாக நீதிபதிகளையோ, வழக்கறிஞர்களையோ மட்டுமே நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம், 2011ல் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு அரசு அதிகாரியை நீதித்துறை உறுப்பினராக நியமிக்க வகைவகை செய்யும் சட்டத்திருத்தத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து தீர்ப்பளித்தனர்.

உச்ச நீதிமன்றம் 2011ல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் புதிதாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[4/5, 15:13] Sekarreporter: ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் இருவர் மறுவிசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு கூடுதல் விளக்கங்களை அளித்துள்ளனர்

 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள் என 150 க்கும் அதிகமானோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆணைய தரப்பும் சசிகலா தரப்பும் விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவர்களிடம் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் மறுவிசாரணை செய்யக்கோரியதால் 11 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று அப்பல்லோ மருத்துவர்கள் தவபழனி மற்றும் செந்தில்குமார் ஆகிய இரு மருத்துவர்கள் இன்று ஆஜராகினர். சிகிச்சை வழங்கும் போது ஜெயலலிதா தனக்கு நன்றி தெரிவித்ததாக எய்ம்ஸ் மருத்துவர் கிலானி அளித்த வாக்குமூலத்தின் படி மருத்துவர் செந்தில்குமாரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த மருத்துவர் செந்தில்குமார், ஜெயலலிதா சுய நினைவில்லாமலே மருத்துவமனையில் இருந்ததாகவும், மருத்துவர் கிலானிக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தது பற்றி தனக்கு தெரியாது எனவும் செந்தில்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். நாளைய தினம் அப்பல்லோ மருத்துவர்கள் நரசிம்மன், பால் ரமேஷ் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது
[4/5, 15:34] Sekarreporter: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலையின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் கூறப்பட்டது.

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மயில் அலகில் மலர் தான் இருந்தது என்பது தெரியவந்ததாகவும், சிலை மாயமானதற்கு காரணமான அதிகாரிகளை அடையாளம் காண உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு விசாரணையை முடிக்க ஆறு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, மயில் சிலை மாயமானது குறித்து காவல் துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், தொல்லியல் துறையிடம் இருந்து, சிலையின் தொன்மை குறித்த சான்றிதழ் பெற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதித்துள்ளதாகவும், சிலையை கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், இந்த வழக்கில் தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாக குறை கூறினார்.

இதையடுத்து, உண்மை கண்டறியும் குழு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், காவல் துறை விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், மயிலின் அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இடைப்பட்ட காலத்தில், அலகில் மலருடன் கூடிய மயில் சிலையை தயாரிக்கும் பணியை துவங்கும்படி, அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
[4/5, 16:23] Sekarreporter: டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை…

டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு…

டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்கள் நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தடையில்லை – உயர் நீதிமன்றம்…

மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்…

டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல் முறையீட்டு வழக்கு ஏப்ரல் 26க்கு தள்ளிவைப்பு…
….
[4/5, 17:22] Sekarreporter: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை ஆறு மாதத்தில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்,
டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மது பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் பார் உரிமையாளர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி சி.சரவணன் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை ஆறு மாதத்திற்குள் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். மேலும் தனது உத்தரவில்,1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் மேலும் அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்று தெரிவித்துள்ளார். மதுவிலக்கு சட்டப்படி மதுபான கடைகளோடு தின்பண்ட கடைகள் மற்றும் பார்கள் அமைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்பண்டாரி , நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், வழக்கிற்கு அப்பாற்பட்டு இந்த உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்துள்ளதாகவும், மனுதார்கள் யாரும் பார்களை மூட வேண்டும் என்று கேட்கவில்லை என்று தெரிவித்தார். எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், டாஸ்மாக் நிறுவனம் பார்களை நடத்த அதிகாரம் உள்ளது என்றும் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, டாஸ்மாக் நிறுவனம் பார் நடத்த டெண்டரை கோரலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
[4/5, 19:00] Sekarreporter: காதலிக்க மறுக்கும் பெண்களின் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள சென்னை மகளிர் நீதிமன்றம், இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மன்னார்குடியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு, திருப்பூரை சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

காதலிக்க மறுத்த அப்பெண், சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, அங்கு வந்த அரவிந்த்குமார், அப்பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டதுடன், கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தினர் பதிவுசெய்த வழக்கை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் விசாரித்தார்.

காவல் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி. ஆர்த்தி ஆஜராகி, அரவிந்த்குமாருக்கு எதிராக காவல்துறை சேகரித்த ஆதாரங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து வாதாடினார்.

பின்னர் நீதிபதி முகமது பாரூக் பிறப்பித்துள்ள தீர்ப்பில், அரவிந்த்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள்தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகையில் 10 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், காதலிக்க மறுக்கும் பெண்கள் தாக்கப்படும் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் வகையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்கு தடையை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், இவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...