Madras high court orders

[10/28, 11:13] Sekarreporter: வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சிறப்பு அதிரடிப்படை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய 7.20 கோடி ரூபாய் நிவாரணத்தை வழங்க கோரிய  வழக்கில், தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க கடந்த 1993ம் ஆண்டு தமிழ்நாடு – கர்நாடகா மாநில அரசுகளும் கூட்டு ஒப்பந்தத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, மலை கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

தேடுதல் வேட்டையின் போது, மலை கிராம மக்களை பிடித்து சென்று சட்டவிரோதமாக சித்ரவதை முகாம்களில் சிறை வைத்து, சித்ரவதை, பாலியல் வன்முறை, திட்டமிட்ட மோதல் சாவுகள், மேலும் பொய் வழக்கு போன்ற கொடுமைகள் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவின்படி, சதாசிவா குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.

இந்த குழு, அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட 89 பேருக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைத்தது.

இதன்படி, இரு மாநில அரசுகளும் தலா 5 கோடி ரூபாயை ஒதுக்கியது.

இந்த 10 கோடி ரூபாயில் 2.80 கோடி ரூபாய் இழப்பீடாக, கடந்த 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகள் ஆகியும்  மீதமுள்ள 7.20 கோடி ரூபாய்  நிவாரணம் வழங்கவில்லை என்பதால் முழு இழப்பீட்டையும் வழங்க கோரி விடியல் மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர் மகாதேவன், மனுதாரர் அமைப்பின் கோரிக்கை குறித்து தமிழக அரசு 4 வாரத்திற்குள் தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
[10/28, 11:46] Sekarreporter: தமிழகத்தில் உள்ள கோவில்களில் உள்ள நகைகள், அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே உருக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது, கோவில் உபரி நிதியில் கல்லூரி துவங்குவது உள்பட 112 அறிவிப்புகள் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.

இந்த அறிவிப்புகளின் அடிப்படையில் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் டி.ஆர்.ரமேஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், கோவில்களின் தங்க நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விதிகளின்படி, கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்க கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில் நகைகளை உருக்கவில்லை என்றும், காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுவதாகவும், அதை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இருவரும் அடங்கிய குழு அமைத்து, நகைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே நகைகள் உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் 11.5 கோடி ரூபாய் வட்டி வருவாயாக கிடைத்துள்ளதாகவும், அது கோவில் நலனுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கோவில்கள் சீரமைப்புக்கு நிதி தேவைப்படுவதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர்.

இதையடுத்து, நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம் எனவும், அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மற்ற வழக்குகளுடன் சேர்த்து டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[10/28, 14:59] Sekarreporter: சட்டமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை எதிர்த்த வழக்கில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பொது செயலாளர் அப்துல் சமது ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், உதய சூரியன் சின்னத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பொது செயலாளர் அப்துல் சமது ஆகியோர் போட்டியிட்டனர்.

இதனை எதிர்த்து அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் அப்துல் ஹக்கீம் சென்னை அல்லிகுளத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட கூடாது என்ற விதியை மீறி, கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பொது செயலாளர் அப்துல் சமது ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்களாக தொடர தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேவியர் ரகுமான் மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஜவாஹிருல்லா மற்றும் அப்துல் சமது ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
[10/28, 15:27] Sekarreporter: மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிடும்படி தமிழக தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தேவாலயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து ஈரோடு, தொப்பம்பாளையத்தில் உள்ள பெந்தக்கோஸ்த் மிஷன் சர்ச் என்ற அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்றும், வழிபாட்டுத் தளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான சத்தத்துடன் தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தாசில்தாரரின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை நிராகரித்து, கட்டிட அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், அனுமதி பெறாத கட்டடத்தில் மத வழிபாட்டுத்தலங்கள் இயங்குவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பும் வகையில் இயங்குவது போன்றவை சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மக்களின் மத உணர்வுகளை காரணம்காட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்புவது, பிறருக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்களை அரசு தீவிரமாக கருத வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மத வழிபாட்டு தலங்களுக்கு கட்டிட அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அப்பகுதி மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மத வழிபாட்டுத் தலங்களில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளால் ஒரு மனிதன் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி சுப்பிரமணியம், நிம்மதியான வாழ்க்கைக்கான பாதுகாப்பை அரசு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டங்கள் உருவாக்கப்படுவது அமல்படுத்துவதற்காகத்தானே தவிர, அதை சட்டப்புத்தகத்தில் மட்டும் வைத்திருப்பதற்காக அல்ல என்பதை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, சட்டத்தை அமல்படுத்துவதில் யாரிடமும் பாரபட்சமும் காட்டக்கூடாது என எச்சரித்துள்ளார்.

பின்னர் இந்த வழக்கில் தாமாக முன்வந்து தலைமை செயலாளரை இணைத்த நீதிபதி, கட்டிட விதி மீறல் மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் மத வழிபாட்டுத் தலங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், அதிகாரிகளுக்கு முறையான உத்தரவுகளையும், சுற்றறிக்கையையும் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
[10/28, 15:55] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்தை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். அவர் நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்க உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சபிக் ஆகிய 4 பேரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி நான்கு பேரும் அக்டோபர் 20ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்தை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய நீதிபதி ஜெ.சத்தியநாராயணா பிரசாத், நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
[10/28, 16:52] Sekarreporter: குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுத்து,மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலத்தை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.இந்த நிலையில், குயின்ஸ்லேண்ட் நிர்வாகம்  சென்னை உயர்நீதிமன்றத்தில்  கடந்த 2015 ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில் பூங்கா அமைந்துள்ள இடத்தில், 21 ஏக்கர் கோவில் நிலம் என்று கூறி ஆக்கிரமித்த இடத்திற்கான குத்தகை தொகையை வழங்க கோரி, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட்டிருந்தது. நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்து இந்த வழக்கு அண்மையில் நீதிபதி எம்.சுந்தர்  முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில்,கடந்த 1995 ம் ஆண்டில்,  சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில்  செல்வராஜ் என்பவருக்கு,  குத்தகைக்கு விடப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் கோவில் பெயரில்  இருந்த பட்டாவை ரத்து செய்ததால்   இதைப் பயன்படுத்திக் கொண்டு, குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.அவற்றின் குத்தகை 1998 இல் முடிவடைந்துவிட்டதாக சுட்டிகாட்ட ப்பட்டது .மேலும் 1998 க்குப் பிறகு குயின்ஸ்லேண்ட்  அத்துமீறி ஆக்கிரமித்திருந்ததாகவும், வாதிடப்பட்டது. வருவாய்த் துறையினருக்கும், இந்து அறநிலையத்துறைக்கு ம்மிடையே  உள்ள பிரச்சனையை, தங்களுக்கு சாதகமாக குயின்ஸ் லேண்ட் நிறுவனம் பயன் படுத்திக் கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்த உள்ள கோவில் நிலங்களை 4 வாரத்தில் மீட்க வேண்டும் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த நிறுவனம் வருவாய் துறைக்கு 1 கோடியே 08,69,423  ரூபாயையும், தொகையையும் ,அதேபோல் கோவிலுக்கு
9.5 கோடி ரூபாயையும் இழப்பீடாக
செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து குயின்ஸ்லாந்து நிறுவனத்தை நடத்தும் ராஜன் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நிலம் வருவாய்துறைக்கானதா அல்லது இந்து சமய அறநிலையத்துறைக்கானாதா என முடிவு செய்யப்படாத நிலையில் இந்து அறநிலையத்துறையின் மூலம் தங்களை வெளியேற்றியது தவறு என்று தெரிவித்தனர்..
சம்பந்தப்பட்ட நிலம் யாருக்கு சொந்தமானது என்று முடிவு செய்த பின்பே தங்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாத் உபாத்தியாயா மற்றும் சத்திக்குமார் குமார குரூப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில், இவர்களுடைய ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு இந்த நிலம் அரசுக்குத்தான் சொந்தம் என்றும் விவசாயம் செய்வதற்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும், ஆனால் விவசாயம் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
[10/28, 16:52] Sekarreporter: சங்கராபுரத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் பலியான விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த செல்வகணபதி என்பவர்,
தீபாவளி பண்டிகையை ஒட்டி, மொத்தமாக பட்டாசுகளை வாங்கி தனக்கு சொந்தமான கடையின் பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.

கடந்த 26ம் தேதி மாலை, மின் கசிவு காரணமாக பட்டாசுகள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் ஏழு பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இச்சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
[10/28, 17:07] Sekarreporter: தமிழகத்தில் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு 694 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, தமிழகத்தில் பேருந்து கொள்முதல் செய்வதற்காக 694 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் படிப்படியாக மாற்றுத் திறனாளிகளுக்கும் வகையிலான பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், இதுதொடர்பான விரிவான பட்டியலுடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளனர்.
[10/28, 17:55] Sekarreporter: லைகா நிறுவனம் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண இருப்பதாக தெரிவிக்கபட்டதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்தது.

நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் உருவான நிலையில், பணிகள் நின்றுபோனது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா நிறுவனம் தரப்பில் இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியின் மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டதுடன், அந்த சமயத்தில் ஷங்கர் வேறு படம் இயக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்த போவதில்லை என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அப்போது ஷங்கர் தரப்பில் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களை முடிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இயக்குனர் ஷங்கருக்கு எதிராக லைலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
[10/28, 17:56] Sekarreporter: மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வரைவு விதிகளை தற்போதைக்கு வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசு அலுவலகங்கள், போக்குவரத்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கட்டிடங்கள், போக்குவரத்துகள் உருவாக்க வகை செய்யும் வகையில் புதிய விதிகளை வகுக்க முடிவு செய்த மத்திய அரசு, இதுசம்பந்தமாக வரைவு விதிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதால், இதை விளம்பரப்படுத்தி, பொதுமக்களின் கருத்துக்களை கேட்க உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வாதங்களை முன்வைக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து ஏற்று வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தற்போதைக்கு வரைவு விதிகளை அறிவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
[10/28, 17:57] Sekarreporter: வரும் 2021-22 ம் கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டா (NATA) அல்லது ஜெ.இ.இ. (JEE) நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களை, பி.ஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதித்த இடைக்கால உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டா அல்லது ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறை கடந்த ஆண்டு (2020- 21) வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், வரும் 2021-22ம் கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்புக்கான கொள்கை விளக்க குறிப்பில் நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும்  விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதை எதிர்த்து அகடமிக் சொசைட்டி ஆப் ஆர்க்கிடெக்ட் என்ற அமைப்பும்,  மெய்யம்மை என்ற மாணவியும் தொடர்ந்த வழக்கில்,
பிற மாநிலங்களில் ஜெ.இ.இ. தேர்வு எழுதியவர்களும் பி.ஆர்க் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் நாட்டா தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நாட்டா மற்றும் ஜெ.இ.இ. தேர்வில் தகுதி பெற்றவர்களை பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,
பி.ஆர்க் படிப்புக்கு நாட்டா மட்டுமே தகுதியான நுழைவு தேர்வு என அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும்,
மக்களவையும் மாநிலங்களவையும்
அதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்
இந்திய ஆர்க்கிடெக்சர் ( Architecture) கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது இடைக்கால உத்தரவை நீக்கி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்
[10/28, 18:23] Sekarreporter: செ/நிரு/சேகர்/ஐகோர்
சென்னை,அக்.29–
குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுத்து அப்பீல் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலத்தை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.இந்த நிலையில், குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இதை தனி நீதிபதி தள்ளுபடி செய்து கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து குயின்லேண்ட் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் பிரசாத் உபாத்தியாயா மற்றும் சத்திக்குமார் குமார குரூப் அமர்வு விசாரித்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து அப்பீல் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

You may also like...