Madras high court october 23,rd orders news

[10/21, 13:01] Sekarreporter: கொலை, போக்சோ வழக்குகள், அதிக வட்டி வசூலித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், செம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ்வர்ராஜ், சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆகியோர் எந்த நீதிமன்றங்களிலும் ஆஜராக கூடாது என தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றிய சீதாராமன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும், அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும் உள்துறை கூடுதல் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

போலி முத்திரை தாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருப்பூர் வழக்கறிஞர், ராஜேந்திரன், போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை வழக்கறிஞர் அசோக் மற்றும் கண்டக்டராக பணியாற்றியதை மறைத்து சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் ஆகியோருக்கும் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
[10/21, 13:06] Sekarreporter: நீலகிரியில் டி23 புலியை உயிருடன் பிடித்த தற்காக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன், 51, என்பவரை, 24ம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் புலியை பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து,  புலியை சுட்டுக் கொல்வது  உள்பட அதை வேட்டையாடுவதற்கான  உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார்நீரஜ்  பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து உத்தரபிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் பிப்பிள் இன் கேட்டல் ஆப் இந்தியா என்ற விலங்குகள் நல அமைப்பு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில்
குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி,நீதிபதி ஆதிகேசவலு அமர்வு,
அந்த புலியை கொல்லக்கூடாது, நம் நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான புலிகள் மட்டுமே உள்ளன என்று தெரிவித்தனர். உயிருடன் பிடித்த பின்பு அதன் குணாதிசயங்களை ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, டி23 புலி உயிரோடு பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில், தெரிவிக்கப்பட்டது . இதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசியங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
[10/21, 13:18] Sekarreporter: கொலை, போக்சோ வழக்குகள், அதிக வட்டி வசூலித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், செம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ்வர்ராஜ், சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆகியோர் எந்த நீதிமன்றங்களிலும் ஆஜராக கூடாது என தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றிய சீதாராமன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும், அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும் உள்துறை கூடுதல் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

போலி முத்திரை தாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருப்பூர் வழக்கறிஞர், ராஜேந்திரன், போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை வழக்கறிஞர் அசோக் மற்றும் கண்டக்டராக பணியாற்றியதை மறைத்து சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் ஆகியோருக்கும் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
[10/21, 13:28] Sekarreporter: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு கடந்த 8ஆம் தேதி பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த அரசாணைகள் பிறப்பிக்கும்போது, அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை அக்டோபர் 21 வரை நிறுத்துவைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு முழுமையான விவரங்களுடன் பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர். அதுவரை, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.
[10/21, 15:03] Sekarreporter: அரசு தொலைத்தொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிதி உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை சேர்ந்த ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்ட அரசு தொலைத்தொடர்பு ஊழியர்கள் கூட்டுறவு சங்கம், பன்-மாநில கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2004-05ல் அந்த சங்கம் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளனூரில் உள்ள 95.55 ஏக்கர் நிலத்தை 15 கோடியே 97 லட்சம் ரூபாய்க்கு ஐசிஐசிஐ வங்கியின் கடனுதவியுடன் வாங்கி, அதில் 88.55 ஏக்கர் நிலத்தில் வீடுகளை கட்ட திட்டமிட்ட நிலையில் அதில் ஒரு பகுதியை பெங்களூருவை சேர்ந்த ஆட்கோ (OTCO) என்ற நிறுவனத்திற்கு விற்றதும், பின்னர் அதே நாளில் ஜீசஸ் மிஷனரீஸ் என்ற அமைப்பிற்கு மாற்றப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டுமென சங்கத்தின் உறுப்பினரான என். பாபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியாருக்கு விற்றது தொடர்பாக சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்டு சங்கத்திடம் ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்திருந்தார். இடைக்கால கோரிக்கைகளாக சங்கத்தின் நிலத்தை தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கவும் கோரிக்கை வைத்திருந்தார். சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி, நிலத்தை பிற நபருக்கு பத்திரப்பதிவு செய்வதற்கும், சங்க நடவடிக்கைகளில் முந்தைய நிர்வாகிகள் தலையிடுவதற்கும் இடைக்கால தடைவிதித்திருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சங்கத்தின் தரப்பில் தேர்தலை நடத்துவதற்காக 2019 மார்ச் 14ஆம் தேதி வழக்கறிஞர் சி.டி.மோகனை தேர்தல் அதிகாரியாக நியமித்திருந்ததாகவும், அந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 4000 ஊழியர்கள் விலகியதால் தேர்தல் நடத்தப்படவில்லை என தெரிவிக்கபட்டது. நிலத்தின் உண்மைத்தன்மையை அறியாமல் தனி அதிகாரி வாங்கிய அந்த நிலத்தை விற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகே நில விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக கூறுவது தவறு என்றும் தெரிவிக்கபட்டது.

பின்னர் மனுதாரர் மற்றும் சங்கம் ஆகிய இரு தரப்பிலும் சங்க நடவடிக்கைகள் குறித்தி ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையிலான குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 95.55 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது, அதில் ஒரு பகுதி விற்கப்பட்டது உள்ளிட்டவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள், செய்யப்பட்ட நிதி பரிமாற்றங்கள் குறித்தும், சங்க உறுப்பினர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் செயல்பாடு குறித்தும் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் சங்கத்தின் நிதி உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிற்கு அனைத்து தரப்பும் முழுமையான ஒத்துழைப்பை தரவேண்டுமென உத்தரவிட்டதுடன், குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.
[10/21, 15:28] Sekarreporter: கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், கல்வி எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் துவங்கியது முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால், உயர் கல்வி பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி, வகுப்புகளை மீண்டும் துவங்க உத்தரவிடக் கோரி, நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாட்டில், 23.8 சதவீத வீடுகளில் மட்டுமே இணைய தள இணைப்புகள் உள்ளதாகவும், 10.7 சதவீத வீடுகளில் மட்டும் கணிப்பொறி வசதிகள் உள்ளதாகவும், 130 கோடி மக்கள்தொகையில், 30 கோடி மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் உள்ளதாக 2017ல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், இதனால் அனைத்து மாணவர்கள் ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் வசதியை பெற்றிருக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டிடக் கலை படிப்புகளை ஆன் லைன் மூலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், தொடர் ஊரடங்கு காரணமாக, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பள்ளி, கல்லூரிகளும், நீதிமன்றமும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளன எனத் தெரிவித்தனர்.

உடல் நலம் சரியில்லாத, மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஆன் லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்பு வழங்க வேண்டும் எனவும், எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு நடத்தப்படும், எந்தெந்த நாளில் ஆன் லைன் வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து, அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், நேரடி வகுப்புக்கு மாற்றாக கூடுதலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் எனவும், கலப்பு முறையில் நேரடி மற்றும் ஆன் லைன் வகுப்புகளை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர்.

கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், கல்வி எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.
[10/21, 16:29] Sekarreporter: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும், தீர்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு விசராணை துவங்கியுள்ளது.

அப்போது , மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக ஐ.ஜி.கீதாவை நியமித்து அரசாணை பிறப்பித்தாகவும் அவருடைய பதவிக்காலம் ஓராண்டு நிறைவடைந்தும் கொரனோ பரவல் காரணமாக அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாகவும், அவர், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சம்பளத் தொகை மட்டுமே வழங்கி வருவதாக தெரிவித்தார்.

வழக்கில் வாதம் நிறைவடையாததால் வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
[10/21, 18:05] Sekarreporter: ட்விட்டரில் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், பாஜக-வை சேர்ந்த கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அதன் அடிப்படையில் அக்டோபர் 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் மூன்றாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர் கோபிநாத் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதும்

இந்த மனு நீதிபதி தாவூத் அம்மா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்யாணராமன் உள்நோக்கத்தோடு மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும்,
மத ரீதியாகவும், மத நம்பிக்கை தொடர்பாகவும் பேசக் கூடாதென
ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அவர் தொடர்ந்து மீறி வருவதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சமூகத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் புகார்தாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...