Madras high court march 15 ஐகோர்ட் உத்தரவுகள் தார்ச் 14

[3/14, 11:46] Sekarreporter: கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கிய நிலையில், மறுதேர்தல் நடத்துவதை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சுளேஸ்வரனட்டி பேரூராட்சி உறுப்பினராக தேர்வாகியுள்ள திமுக-வை சேர்ந்த ஜெ.வனிதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரூராட்சி தலைவர் வேட்பாளராக ஆ.ராகினி என்பவர் கட்சியால் அறிவிக்கப்பட்டதால், போட்டி வேட்பாளராக தலைவர் பதவிக்கு போட்டியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் ராகினி 7 வாக்குகள் மட்டுமே பெற்றதால், 8 வாக்குகள் பெற்ற தன்னை பேரூராட்சி தலைவராக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததாகவும், அதிருப்தி அடைந்த ராகினியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டதை அடுத்து, தவறுகள் இருப்பதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை, தேர்தல் அலுவலர் திரும்ப பெற்றதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தவறுகளை சரிசெய்து மீண்டும் சான்றிதழை வழங்காமல், மீண்டும் தேர்தல் நடத்தபட்டு வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் அலுவலர் அறிவித்தது சட்டவிரோதம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சூளேஸ்வரன்ட்டி பேரூராட்சி தலைவராக வெற்றிபெற்றதாக தன்னை அறிவித்து, சான்றிதழை வழங்க தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கிய நிலையில், மீண்டும் தேர்தல் நடத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், அந்த சான்றிதழில் உள்ள கையெழுத்து தேர்தல் அலுவலரின் கையெழுத்து அல்ல என்றும், சான்றிதழில் தேதி, பிப்ரவரி 22 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேதி தவறாக அச்சிடப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் கூறியதை அடுத்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[3/14, 13:01] Sekarreporter: செல்வ வரி வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், தீபா, தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2008 – 2009 ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax) கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த 2008 ம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாரயண பிரசாத் அமர்வில் விசாரணையில் உள்ளது.

ஜெயலலிதா காலமாகி விட்டதால், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதி கோரி வருமான வரித்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா, தீபக் தரப்புக்கு வழங்க வருமான வரித்துறை தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.
[3/14, 14:56] Sekarreporter: வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென வணிக வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

நடிகர் விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து
இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவோடு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008ம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக்கோரி 2021ம் ஆண்டு தான் நோட்டீஸ் அளித்ததால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டுமென வாதிப்பட்டது.

நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே நடிகர் விஜய் வழக்கில் பதிலளித்துள்ள வணிக வரித்துறை,
இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்த பிறகும் வரி செலுத்தப்படவில்லை என்றும், குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால், 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டதாகவும், சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரை வேறொரு நபருக்கு விற்று விட்டதாக நடிகர் விஜய் கூறினாலும், இறக்குமதி செய்த அவர் நுழைவு வரி செலுத்தியாக வேண்டும் எனவும், ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் கொடுத்து, போதிய அவகாசம் வழங்கிய போதும், எந்த பதிலும் இல்லாததால் வட்டார போக்குவரத்து அலுவலக ஆவணங்களைப் பெற்று நுழைவு வரியை கணக்கிட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
…..
[3/14, 16:46] Sekarreporter: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் சார்பில் முதன்முறையாக பரோலில் விடுவிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், தனது மகள் தற்போது பரோலில் உள்ளதால், மருமகன் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். வேலூர் சிறையில் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை முருகன் உட்பட ஏழு பேரையும் அரசியலமைப்புச் சட்ட 161 பிரிவின்கீழ் முன்கூட்டியே விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில், தற்போது வரை விடுவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் தனது மகள் நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு, நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் ,இந்த நிலையில் நளினி தனது கணவரை பரோலில் விடுவிக்க மனு அளித்தும் சிறைத் துறைக்கு எந்த நடவடிக்கை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தனது மருமகனுக்கு உடல்நலக்குறைவுடன் உள்ளதாகவும் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதால், 30 நாட்கள் பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
[3/14, 17:57] Sekarreporter: தமிழகம் முழுவதும் 500-600 ஏக்கர் சாகுபடி பரப்புள்ள பகுதிகளில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த வெங்கடேசன் உள்ளிட்ட விவசாயிகள் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிலங்களில் சாகுபடியாகும் நெல்லை, அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பதாகவும், ஆனால் ஊழல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் அவதிப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் போதுமான அளவில் கொள்முதல் நிலையங்கள் இல்லை எனவும், 3,000 ஏக்கர் பரப்பளவிற்கு ஒரு கொள்முதல் நிலையம் என்ற அளவில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிபிட்டுள்ளனர்.

ஒரு மாதம் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதாலும், அதற்கு பின்னர் தனியாரிடம் விற்பதாலும் இழப்பை சந்திப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பை வைப்பதற்கான போதுமான கிட்டங்கிகளும் இல்லை என்றும், கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவுசெய்து விற்பனை செய்வதால் பாதிப்புக்கு உள்ளவதாகவும், இடைத்தரகர் ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் வரை கமிஷன் வாங்குவதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் 27 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அரசு அறிவித்தாலும், அவை முறையாக செயல்படவில்லை எனவும், அவற்றில் 26 நிலையங்கள் பள்ளி கட்டிடம், கூட்டுறவு வங்கி, நூலக கட்டிடம் ஆகியவற்றில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் போதுமான கொள்முதல் நிலையங்களை அமைக்கவும், தானியங்கி டோக்கன் நடைமுறைகளை பின்பற்றவும் உத்தரவிட்டிருந்தாலும், இதுவரை அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் 500 முதல் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில், போதுமான போக்குவரத்து வசதி, இருப்பு வைக்கும் வசதி, அடிப்படை வசதிகளுடன் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் மையத்தை அமைக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இடைத்தரகர்களை ஒழிக்கவும், அரசியல் தலையீடுகளை தடுக்கவும் உத்தரவிட வேண்டுமென கோரிகை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இதுசம்பந்தமாக மார்ச் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

[3/14, 07:03] Sekarreporter: 138 case CRIMINAL APPELLATE JURISDICTION K.M. JOSEPH; HRISHIKESH ROY, JJ. CRIMINAL APPEAL NO.362 OF 2022 (Arising out of SLP (Crl) No.1963 OF 2019); 7th March, 2022 https://sekarreporter.com/138-case-criminal-appellate-jurisdiction-k-m-joseph-hrishikesh-roy-jj-criminal-appeal-no-362-of-2022-arising-out-of-slp-crl-no-1963-of-2019-7th-march-2022/
[3/14, 07:57] Sekarreporter: Judge Suthantheram: Great. Supreme Court has taken a very lenient view in sentencing an accused for the offence under sec. 138 N. I. Act. Cheque amount 7 lakhs paid as compensation as per trial court order. One year sentence set aside instead five thousand rupees fine and additional compensation of fifteen thousand rupees only ordered. https://sekarreporter.com/judge-suthantheram-great-supreme-court-has-taken-a-very-lenient-view-in-sentencing-an-accused-for-the-offence-under-sec-138-n-i-act-cheque-amount-7-lakhs-paid-as-compensation-as-per-trial-court/
[3/14, 07:57] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1503195818274492418?t=cJOoy4t0zwNrsjFE_gQizA&s=08
[3/14, 08:07] Sekarreporter: [3/14, 08:05] G Karuppasamy pandiyan, Advocate.: 138 case CRIMINAL APPELLATE JURISDICTION K.M. JOSEPH; HRISHIKESH ROY, JJ. CRIMINAL APPEAL NO.362 OF 2022 (Arising out of SLP (Crl) No.1963 OF 2019); 7th March, 2022 https://sekarreporter.com/138-case-criminal-appellate-jurisdiction-k-m-joseph-hrishikesh-roy-jj-criminal-appeal-no-362-of-2022-arising-out-of-slp-crl-no-1963-of-2019-7th-march-2022/
[3/14, 08:06] Sekarreporter: Send audio or video regarding this order
[3/14, 09:00] Sekarreporter: Karuppasamy pandiyan, Advocate.: At the first blush i shocked to see the judgement.but, on reading the whole judgement,i found that supreme court has substituted the one year imprisonment as fine amount of 5000 is perfectly correct since the cheque amount cum compensation has already been deposited.hence https://sekarreporter.com/karuppasamy-pandiyan-advocate-at-the-first-blush-i-shocked-to-see-the-judgement-but-on-reading-the-whole-judgementi-found-that-supreme-court-has-substituted-the-one-year-imprisonment-as-fine-amou/
[3/14, 09:31] Sekarreporter: [3/14, 09:30] Duraikannan Dmk: கழக சட்ட ஆலோசகர், பாரளுமன்ற மேலவை உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் திரு.N.R.இளங்கோ M.P. அவர்களின் துயரத்தில் துனை நின்று அவர் மீண்டு எழ கழக தலைவர் வழியில் அணைவரும் அவருக்கு துனை நிற்ப்போம்.

துரை கண்ணன்
மாவட்ட அமைப்பாளர்
சென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி.
[3/14, 09:31] Sekarreporter: 🍁
[3/14, 11:38] Sekarreporter: https://youtu.be/jgVcG2YeVn8
[3/14, 12:12] Sekarreporter: [3/14, 12:11] Duraikannan Dmk: இன்றைய தினம் M.P&M.L.A களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கழக அமைப்பு செயலாளர் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் அண்ணன் R.S.பாரதி அவர்கள் முரசொலி அறக்கட்டளை சார்பில் BJP முன்னால் தலைவர் L முருகன் மீது தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது எதிர்மனுதார்ர் தரப்பில் L.முருகன் ஆஜராகமல் இருப்பதற்க்கு விலக்கு கேட்டு மணு தாக்கல் செய்யப்பட்டது ஆணால் நீதிபதி மணுவிணை ஏற்க்க மறுத்து Bailable Warrant வழங்க இருப்பதாக கூறினார் ஆனால் எதிர்தரப்பில் ஒரே ஒரு முறை விலக்கு அளிக்கும் படி வலியுறுத்தி கேட்டார்கள் எனவே நீதிபதி அவர்கள் L.முருகன் பாராளுமன்றத்தில் ஆஜரானதற்க்கு உரிய சான்றாவனத்தை தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாக சொல்லி வழக்கினை தற்காலிகமாக ஒத்திவைத்தார்கள்.
புகார்தாரர் அண்ணன் R.S.பாரதி அவர்களும் உடன் சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் அவர்களும் ஆஜராகினார்கள்.
புகார்தாரர் தரப்பில் கழக வழக்கறிஞர்கள் மணுராஜ் சண்முகசுந்தரம், துரை கண்ணன், N.M.கணேஷ், R.விஜயலட்சுமி துரை.கண்ணன், ஆறுமுகம், மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்
[3/14, 12:12] Sekarreporter: 🍁🍁
[3/14, 13:34] Sekarreporter: [3/14, 13:33] Sekarreporter: https://youtu.be/TcY_2vT7wrg
[3/14, 13:33] Sekarreporter: மறைமுக தேர்தல் அதிமுக வழக்கு அதிமுக சார்பாக மூத்த வக்கீல. ஜி.ராஜகோபால் ஆஜராகி வாதாடினார்
[3/14, 14:00] Sekarreporter: [3/14, 13:58] Sekarreporter: vijay tax case for government AAG Mr. Haja Nazirudeen assisted by Mr. Richardson Wilson, AGP
[3/14, 13:58] Sekarreporter:
[3/14, 14:01] Sekarreporter: [3/14, 14:00] Sekarreporter: [3/14, 13:58] Sekarreporter: vijay tax case for government AAG Mr. Haja Nazirudeen assisted by Mr. Richardson Wilson, AGP
[3/14, 13:58] Sekarreporter:
[3/14, 14:01] Sekarreporter: Judge r sureskumar orders reserved
[3/14, 14:39] Sekarreporter: [3/14, 14:39] Sekarreporter: https://twitter.com/nrelango_dmk/status/1503288035240075264?t=E2K7jUgM12HkUx_a0mvz1w&s=08
[3/14, 14:39] Sekarreporter: திராவிடத் தேர் உருண்டோடி வென்றிட உடனிருப்பேன், திராவிடத் தலைவர் சொல்லின் வலிமையால் மீண்டு வருவேன்.

அன்பாய், ஆறுதலாய் இருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. https://t.co/bkIHJA3okW
[3/14, 14:41] Sekarreporter: [3/14, 14:40] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1503297467768475650?t=3mhpAT_BEPSie2gx79t8oA&s=08
[3/14, 14:40] Sekarreporter: [3/14, 14:39] Sekarreporter: https://twitter.com/nrelango_dmk/status/1503288035240075264?t=E2K7jUgM12HkUx_a0mvz1w&s=08
[3/14, 14:39] Sekarreporter: திராவிடத் தேர் உருண்டோடி வென்றிட உடனிருப்பேன், திராவிடத் தலைவர் சொல்லின் வலிமையால் மீண்டு வருவேன்.

அன்பாய், ஆறுதலாய் இருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. https://t.co/bkIHJA3okW
[3/14, 15:18] Sekarreporter: [3/14, 15:08] Patty Jeganathan Mhc Advt: சேகர், மூத்த கழக வழக்கறிஞர் இளங்கோ அவர்கள், காண்டீபன், வில்லுக்கு விஜயனான அர்ச்சுனன், தன் செல்ல மகன் அபிமன்யுவை இழந்தபோது பட்ட வேதனைகள விட அதிக துயரம் இளங்கோவுக்கு. மொத்த கழகத்தினருக்கும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் பெரும் அதிர்ச்சி ,காரணம் இளம்வயது. ஆண்டவர் மருந்திட்டார், துணையாக இருப்பார் சேகர்.
[3/14, 15:18] Sekarreporter: 🍁
[3/14, 17:19] Sekarreporter: https://youtu.be/O0LKWokZv6M
[3/14, 17:36] Sekarreporter: https://twitter.com/pwilsondmk/status/1503340407765147648?s=24
[3/14, 22:00] Sekarreporter: ] Nakiren Dmk: “நில அபகரிப்பு” “பொது வெளியில் அராஜகம்” “கொலை முயற்சி வழக்கு” உள்ளிட்ட புகார்களுக்குத் https://sekarreporter.com/nakiren-dmk-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/

You may also like...