Madras high court june ,9 th news pnpj bench order chief justice order

    [6/6, 14:27] Sekarreporter: *பாஜக தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகள் பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல் உள்ளதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்*

    கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முன்பு இன்று நடைபெற்றது. திமுக சட்டத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சட்டத் துறைத்
    தலைவர் மூத்த வழக்கறிஞர் விடுதலை,சட்டத்துறையின் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இரா.கிரிராஜன் மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர் எஸ் பாரதி கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு, பேட்டியளித்த அவர் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை உயர்த்தி திமுக அரசு சாதனை படைத்துள்ளதாக சுட்டிக் காட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அவர், பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பது போல் உள்ளதாக குறிப்பிட்டார்…
    [6/6, 22:09] Sekarreporter: தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதற்கு அடிப்படையாக இருந்த தகுதி பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி, கடந்த 2019 மே 31ம் தேதி பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து காலியான அந்த பதவிக்கு பூர்ண சந்திரனை நியமித்து, கடந்த அதிமுக அரசு உத்தரவிட்டது.
    பூர்ணசந்திரனை விட சீனியரான தன்னை கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்க கோரியும், இதுதொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க கோரியும் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2020 ஆண்டு, பணி மூப்பில் உள்ள கீதாவை விடுத்து பூர்ணசந்திரனை கல்லூரி கல்வி இயக்குனராக நியமித்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி தமிழக அரசின் அரசாணை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

    உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பூர்ணசந்திரன் பெயரை உள்ளடக்கிய தகுதி பட்டியலின் அடிப்படையில் மீண்டும் அவரை கல்லூரி கல்வி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டதாக டாக்டர் கீதா சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
    அந்த தகுதி பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் கோரியிருந்தார்.
    இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமது ஷபிக் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பூர்ணசந்திரனின்
    நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்ட பிறகும், தகுதி பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு மீண்டும் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டதாகவும்,எனவே அந்த தகுதி பட்டியலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜி. சங்கரன் வாதிட்டார்.
    இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இன்று வழங்கிய தீர்ப்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவிக்கான பூர்ணசந்திரன் பெயரை உள்ளடக்கிய தகுதி பட்டியலை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளனர்.இதனால் அவரது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    [6/7, 12:11] Sekarreporter: அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த மூன்று வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம், அதன் உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பான தகவல்கள் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    இந்த பதிவுகள் தொடர்பாக அறப்போர் இயக்கத்திற்கு எதிராக கே.சி.பி. இன்ப்ரா நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் ஆர்.சந்திரசேகர் ஆகியோரின் சார்பில் மான நஷ்ட ஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பேஸ்புக் பதிவு, டிவிட்டர் பதிவு மற்றும் கூகுள் இணையதளத்தில் உள்ள தகவல் தொடர்பாக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி முன்று வழக்குகள் தொடரப்பட்டு, அற்ப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தனி நீதிபதி முன்பான இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் தரப்பில் தங்கள் பதிவிட்ட ஓராண்டிற்குள் வழக்கு தாக்கல் செய்யாமல், 3 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. ஊழல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவதை இதுபோன்ற வழக்குகள் மூலம் தடுக்க நினைப்பதாகவும் வாதிடப்பட்டது.

    இதையடுத்து, தனி நீதிபதி முன்பான மூன்று வழக்குகளின் விசாரணைக்கு தடைவிதித்த நீதிபதிகள், வழக்கு குறித்து 6 வாரங்களில் கே.சி.பி. இன்ப்ரா, ஆர்.சந்திரசேகர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    [6/7, 13:57] Sekarreporter: சென்னையில் விக்னேஷ் என்ற வாலிபர் லாக்கப் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து காவலர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அன்று இரவே அவர் விசாரணையின் போது உயிரிழந்தார்.
    இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்வதாக அறிவித்தார்.
    இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு,
    சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் காவல்துறையினர் விக்னேஷை லத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது அம்பலமானது
    இதனையடுத்து குற்றவாளியாக காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் காவலர் பவுன்ராஜ் தவிர மற்ற 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி முன்பு நடைபெற்றது.
    ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்றுவருவதால் ஜாமீன் வழங்க கூடாது சிபிசிஜடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
    [6/7, 16:04] Sekarreporter: சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பியூஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் ஆகியோர் பாஜக ஆதரவாளரும், யு டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.

    இந்த புகாரில் பதிவான வழக்கில் மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரிய கார்த்திக் கோபிநாத் மனுவையும், அவரை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் மனுவையும் தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறையும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்தும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    கார்த்திக் கோபிநாத்தின் மனுவில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்கொடை வசூலை தொடங்கிய மூன்று நாட்களிலேயே 33 லட்சத்து 28 ஆயிரத்து 924 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்கு பிறகு யாரும் நன்கொடை அனுப்ப வேண்டாமென அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    நிதியை பராமரிக்க திருப்பணி கணக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதை கோவில் பணிகளுக்கு தவிர வேறு நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும், அப்படி பயன்படுத்தியதற்கான காரணங்களை தெரிவிக்காமல் கோவில் செயல் அலுவலர் அளித்த புகார் மீது விசாரணை நடத்தாமலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த மனுக்கள் நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மனு மீது வாதிட்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிதிலமடைந்த கோயிலின் காட்சிகளை வெளியிட்டு, மக்களிடம் அனுதாபம் தேடி பணம் வசூல் செய்துள்ளதாகவும்,
    5 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் கடைசி வழக்கில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் வசூலிக்க அறநிலையத் துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார்.

    வசூலித்த பணத்தில் 2 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும், அவருக்கு உடைந்தயாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் தனிப்பட்ட கணக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், கோவிலுக்கு நன்கொடை வசூலிக்க தொடங்கியதும் அவரது கணக்கில் கூடுதல் பணம் வந்துள்ளதாகவும், மிலா ஆப் மூலம் பணம் வசூலித்ததே குற்றம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    கார்த்தி கோபிநாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிதிலமடைந்த கோவிலை சரி செய்ய கோரிக்கை விடுத்ததை ஏற்று மக்கள் பணம் அளித்ததாகவும், கோயிலை சரி செய்ய அரசு முயற்சிக்கவில்லை எனவும், அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையாக நடந்ததாகவும், முறைகேடுக்கு வாய்ப்பில்லை எனவும், பணம் கொடுத்தவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை எனவும் வாதிட்டார்.

    கார்த்தி கோபிநாத் தனது சொந்த பணத்தையும் வழங்கியுள்ளார் எனவும் வசூல் செய்யப்பட்ட பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட அவரால் எடுக்க முடியாது எனவும், தனிப்பட்ட கணக்கை இதில் குறிப்பிடக்கூட இல்லை எனவும், 33 லட்சம் ரூபாய் மொத்தமாக மிலா ஆப்பில் தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    நன்கொடை அளித்தவர்கள் விவரங்களை மிலா ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும், பணம் என்னுடைய பொறுப்பில் இல்லை எனவும்,

    பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் படி 3மணி நேரம் விசாரணை நடத்தி, எந்த தவறும் செய்யவில்லை என காவல்துறையினர் கூறிவிட்டதாக கார்த்திக் கோபிநாத் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து, தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ((ஜூன் 13ஆம் தேதிக்கு)) தள்ளிவைத்துள்ளார்.
    [6/7, 18:19] Sekarreporter: ஆந்திராவிலிருந்து 150 கிலோ கஞ்சாவை கடத்திய வழக்கில், பெண் உள்ளிட்ட மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    கடந்த 2017 ஜூலையில் ஆந்திராவில் இருந்து மதுரவாயல் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்பு நுண்ணரிவு பிரிவு காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது, சொகுசு கார் ஒன்றிலிருந்து 150 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதனடிப்படையில், காரில் பயணித்த மதுரை மாவட்டதைச் சேர்ந்த பாக்கியம், திருமுருகன், பாலமுருகன் ஆகிய மூவரையும் போதைப்பொருள் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கை சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்தார். இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், மூவர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதால், 60 வயதான பாக்கியத்துக்கு10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடுள்ளார். திருமுருகன் மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ஒரு லட்ச அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    வழக்கில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணரிவு பிரிவு போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் என்.பி.குமார், ஏ.செல்லத்துறை ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
    [6/7, 19:39] Sekarreporter: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, அக்கட்சியின் அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அவர் தனது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2017 ல் கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்,
    இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ, கடிதத்தையோ தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை. சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும், அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

    விதிமுறைகளுக்க முரணாக ஜூன் 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் சூரியமூர்த்தி கோரியுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தனபாலன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
    [6/8, 11:30] Sekarreporter: தாராபுரம் பாசன விவசாயிகள் சங்க தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உப்பாறு அணை, பரம்பிக்குளம், ஆழியார், அமராவதி உள்ளிட்ட சுமார் 31 நீர் நிலைகளின் நீரை பயன்படுத்துவோருக்கான சங்கத்துக்கு நிர்வாக குழு தேர்தலை நடத்த குமரேசன் என்பவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து, மாவட்ட ஆட்சியர் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

    தேர்தல் அதிகாரியான குமரேசன், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ரகசிய வாக்கெடுப்பை நடத்தி, வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களை எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் நிராகரித்தும், நிர்வாக குழுவினுடைய 31 தலைவர்கள் மற்றும் 136 உறுப்பினர்களை தேர்வு செய்தும் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக எனக் கூறி, பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுவில், தேர்தல் நடைமுறையை முறையாக பின்பற்றாமல் நிர்வாகக் குழுவை தேர்வு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    தேர்தல் அதிகாரி செய்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளர்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, இந்த விவகார தொடர்பாக தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என தெரிவித்ததுடன், தேர்தலில் போட்டியிடும் தந்தைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பொது நல வழக்கல்ல எனவும், தனி நபர் வழக்கு எனவும் இந்த வழக்கில் மனுதாரர் கோரிய உத்தரவை பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    [6/8, 12:28] Sekarreporter: திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின் போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற உத்தரவிட கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 16 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    எந்த வித தயக்கமும் இன்றி இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கெல்லாம் அடிப்படையாக சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திரையரங்கை நோக்கி ரசிகர்களை வர வைப்பதற்காக நடிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த வன்முறை காட்சிகளை பார்க்கும் இளைஞர்களும் அதன் உண்மை தன்மையை பகுத்தறிய முடியாமல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமாவில் வன்முறை காட்சி வரும்போது “இதில் பயன்படுத்தப்படும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பேப்பரில் செய்யப்பட்டது”, “சிவப்பு நிறத்தில் சிந்துவது ரத்தமல்ல வெறும் கலர் பவுடர் தான்” போன்ற வாசகங்களை இடம்பெற உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது தொடர்பான காட்சிகள் வரும்போது விழிப்புணர்வு வாசகங்களை போன்று சண்டை காட்சிகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, திரைப்பட காட்சிகளை பார்த்து தான் பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தக பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வருவதாக மனுதாரர் தெரிவித்தார்.

    இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பொது நல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர்.

    இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    [6/8, 13:02] Sekarreporter: மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் வாடுவதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ. மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், காமராஜரிடம் நெருங்கிய பழகியவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் மகன் நடராஜமூர்த்தி சங்கிலியால் பிணைக்கப்பட்டு நகர முடியாத நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருப்பதாகவும், இங்கு 3000 நோயாளிகள் உள்ள நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் முழுமையாக குணமடைந்தாலும் இன்னும் மருத்துவமனையில் வாடுவதாக செய்தியில் தெரிவிக்கபட்டிருந்தது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை கோரி தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தும் தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே தான் அளித்த மனு மீது தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, சமூக வலைதள தகவல்களில் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல், எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    அதேசமயம், முறையாக ஆதாரங்களை திரட்டி புதிதாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    [6/8, 13:35] Sekarreporter: நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் எந்த மரங்களை நடவேண்டும், எந்த மரங்களை நடக்கூடாது என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காக 2006ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த நூறு நாள் வேலை வழங்கும் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிய குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிக்ளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    கிராம மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் நடும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

    பல மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மற்றும் பல பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படும் பனை மரங்களை நடக் கோரி 2021ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி மத்திய – மாநில அரசுகளுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எந்த மரத்தை நட வேண்டும், நடக்கூடாது என நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும், இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என தெரிவித்ததனர். இதுபோன்ற கோரிக்கைகளில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பதால், இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டுமென கூறியதை அடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    [6/8, 15:16] Sekarreporter: சாதி மறுப்பு திருமணம் செய்ததால் விருத்தாச்சலத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் தம்பதியர் விஷம் கொடுத்து 2003ல் ஆணவக் கொலை…

    உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை சிபிஐ விசாரித்து கடலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது…

    வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணகியின் சகோதரருக்கு மரண தண்டனை விதித்து 2021 செப்டம்பரில் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு…

    கண்ணகியின் தந்தை, உறவினர்கள், உடந்தையாக இருந்த காவல்துறையினர் என 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு…

    இருவரை விடுதலை செய்தும் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு…

    தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் விசாரணை…

    சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகள் யாருமில்லை – குற்றவாளிகள் தரப்பு வாதம்…

    குற்றவாளிகளில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டம் பொருந்தாது – குற்றவாளிகள் தரப்பு வாதம்…

    கொலைக்கு தொடர் சாட்சியங்கள் உள்ளன. ஆணவ கொலை தான் – முருகேசன் தரப்பு வாதம்…

    கடலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய முருகேசன் குடும்பத்தினர் தரப்பில் வாதம்…
    [6/8, 15:23] Sekarreporter: #கண்ணகிமுருகேசன் #ஆணவகொலை வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு..
    #Madrashighcourt
    கண்ணகியின் தந்தை துரைசாமி, உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி
    இரண்டுபேர் விடுதலை..
    [6/8, 15:53] Sekarreporter: A14 தமிழ்மாறன் மீதான ஆயுளும் ரத்தும்..

    வேறு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை உறுதி
    [6/8, 16:19] Sekarreporter: கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்த முருகேசன் – கண்ணகி ஆகிய இருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

    திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருவரையும் புதுக்கூரைப்பேட்டை முந்திரித்தோப்பிற்கு கொண்டு சென்று, வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் எரித்து கொலை செய்துள்ளனர்.

    இதுகுறித்து, விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்த நிலையில், கடந்த 2004 ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டியன், உறவினர்கள் ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    கண்ணகியின் தந்தை துரைசாமி, ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து 2021 செப்டம்பர் 24 ம் தேதி தீர்ப்பளித்தது. இரண்டு பேரை விடுதலை செய்தது.

    இந்நிலையில் மரண தண்டனையை உறுதிபடுத்த, வழக்கை கடலூர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அதேபோல தண்டனையை ரத்து செய்ய கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீடு மனுக்களை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காக பதியப்பட்டதாகவும், சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை எனவும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டம் பொறுந்தாது என்றும் வாதிடப்பட்டது.

    சிபிஐ தரப்பிலும், முருகேசன் குடும்பத்தினர் தரப்பிலும், இந்த கொலை சம்பவத்திற்கு தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும், இது ஆணவ கொலைதான் என்பதால், கடலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்யவேண்டும் என்று வாதிடப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

    இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உத்தரவிட்டது.

    அதேசமயம், கண்ணகியின் தந்தை துரைசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், அப்போதைய காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, அவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    மேலும், அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், வேறு ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.

    துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
    [6/8, 19:53] Sekarreporter: நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 18 லட்சம் ரூபாய் அளவிற்கு வசூலித்து மோசடி செய்ததாக பதிவான வழக்கில் நீதித்துறை என்ற வாட்ஸ் அப் குழுவின் அட்மினின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகப் பல்வேறு நபர்களிடம் பல லட்சம் பணம் பெற்றும், அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலக நிர்வாகி என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்ட நாகேந்திர குமார், குமார், மணிகண்டன் உள்பட ஏழு பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இவர்களில், மணிகண்டன் என்பவர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது சிபிசிஐடி டி.எஸ்.பி.-யின் ஆட்சேபனை மனுவை மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தாக்கல் செய்தார். அதில், நீதித்துறை என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அதன்மூலம் உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக, ஒரு நபருக்கு 6 லட்சம் ரூபாய் என, 9 பேரிடம் போலி நியமன கடிதங்களை கொடுத்து 18 லட்ச ரூபாய்க்கு மோசடி செய்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மணிகண்டன் வசூலித்த தொகையை ராஜேந்திரகுமார் என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும், மனுதாரரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து மோசடி செய்த பணத்தை வசூலிக்க வேண்டியது அவசியம் உள்ளதால் ஜாமீன் வழங்ககக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆட்சேபனையை ஏற்ற நீதிபதி, ஜாமீன் கோரிய மணிகண்டனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...