Madras high court feb 17th order ஐகோர்ட் பிப் 17உத்தரவுகள் Tn press council ,

[2/17, 06:54] Sekarreporter 1: போலியான பில்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பி மோசடி செய்த நபருக்கு, நான்கு ஆண்டு கடுங்கால் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹாரூன் ரஷீது என்பவர், 2014 பிப்ரவரி முதல், நவம்பர் மாதம் வரை, பல்வேறு வங்கிகளில், பல்வேறு பெயர்களில், நடப்பு கணக்கு துவங்கி, 5 கோடியே 41 லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்துள்ளார்.

மேலும், உரிய விலை ரசீதுகள் பதிவு செய்யாமல், போலியான பில்கள் வாயிலாக, இறக்குமதி செய்ததாக, 34. கோடிே94 லட்சம் ரூபாய் வரை, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹரூன் ரஷீது மீது, சி.பி.ஐ., வழக்கு பதிந்து, 2018ல் கைது செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருவேங்கட சீனிவாசன், குற்றம் சாட்டப்பட ஹாரூன் ரஷீது மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
[2/17, 11:18] Sekarreporter 1: கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராஜா மற்றும் அமுதா ஆகியோருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அவரது கணவர் ராமசாமி, ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில், சசிகலா புஷ்பா உள்பட மூன்று பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என அஞ்சி, முன் ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தொழில் சம்பந்தமாக தன்னை சந்திக்க வந்த இருவரும் புறப்பட 11 மணிக்கு மேலாகி விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வீட்டில் தங்க அனுமதித்ததாகவும், தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனது கணவர் ராமசாமி தான், தன்னை மிரட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, புலன் விசாரணை நிலுவையில் உள்ளதால் சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய பிரிவுகள் எனக் கூறிய நீதிபதி பொங்கியப்பன், 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அடுத்த 15 நாட்களுக்கு ஜெ.ஜெ. நகர் போலீசில் ஆஜராக வேண்டும் எனவும், சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாகக் கூடாது எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
[2/17, 11:18] Sekarreporter 1: சசிகலா புஷ்பாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன்

கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் ராமசாமி அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்….

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணாநகர் வீட்டில், ராஜா மற்றும் அமுதா ஆகியோருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் கணவர் ராமசாமி புகார்

தனக்கு எதிரான் பொய் புகாரில் வழக்குப்பதிவு. கணவர் ராமசாமி தான் மிரட்டியுள்ளார் – சசிகலா

15 நாட்களுக்கு ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாகக் கூடாது எனவும் நிபந்தனை
[2/17, 14:31] Sekarreporter 1: தமிழ்நாட்டிற்கென தனி பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது சேகர்ராம் போலி பத்திரிக்கையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்கை  விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு,  உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய  தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த  வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க  விதிகள் உள்ளனவா என்றும், மத்திய அரசு சட்டப்படி இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில பிரஸ் கவுன்சில்கள் அமைக்க சட்டங்கள் உள்ளனவா என தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பு விரைவில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை உருவாக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
[2/17, 14:31] Sekarreporter 1: மதுபானத்தை கையாளாத மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் எடுத்துச்செல்லும் மதுபானத்தை அருந்த, கிளப்புகள் உரிமம் பெற வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் படிப்பகம் மற்றும் டென்னிஸ் கிளப் தொடர்ந்திருந்த வழக்கில், தங்கள் மனமகிழ் மன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து வாங்கிவரும் மதுபானங்களை அருந்துவதாகவும், அதற்காக லைசான்ஸ் வாங்க வேண்டுமென அரசு அதிகாரிகளும், காவல்துறையும் கட்டாயப்படுத்துவதாகவும், மனமகிழ் மன்றத்தில் மது விற்பனை செய்யாதபோது அவ்வாறு கட்டயப்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் பொது இடத்தில் மதுபானம் அருந்துவது தடை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மனுதாரர் கிளப்பின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்ட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் படிப்பறை மற்றும் டென்னீஸ் கிளப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கிளப் தரப்பில் தங்கள் மனமகிழ் மன்றத்தில் மது விற்பனை செய்யப்படுவதோ, கையாள்வதோ இல்லை என்றும், உறுப்பினர் கொண்டு வரும் மதுபானங்களை மட்டுமே குடித்துவிட்டு செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. மனமகிழ் மன்றம் என்பது பொது இடம் இல்லை என்பதாலும், உள்ளே விற்பனை நடைபெறவில்லை என்பதாலும் உரிமம் வாங்க சட்டப்படி அவசியம் இல்லை என்றும், காவல்துறை வற்புறுத்தக்கூடாது எனவும் கோரிக்கை வைக்கக்கப்பட்டது. தனி நபர் மதுபானங்களை வைத்துக்கொள்ளவும், பொது இடம் தவிர பிற இடங்களில் வைத்து குடிக்க தடையில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து மதுபானத்தை கையாளாத மனமகிழ் மன்றத்தில் அதன் உறுப்பினர்கள் எடுத்துச்செல்லும் மதுபானத்தை அருந்த, கிளப்புகள் உரிமம் பெற வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
[2/17, 15:52] Sekarreporter 1: தமிழகத்தில் 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட ஏற்பட்ட தாமதத்துக்கான காரணங்களை விளக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.92 சதவீத சதுப்பு நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், சதுப்பு நிலங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியும் எனவும், தற்போது பள்ளிக்கரணை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழுவேலி ஆகியன சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தவிர 12 இடங்களை சதுப்பு நிலங்களாக அறிவிக்கும் பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சதுப்பு நில பாதுகாப்புக்கான ராம்சிர் சாசனத்தின் கீழ், தமிழகத்தில் கோடியக்கரை மட்டும் சதுப்பு நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், சட்டவிதிகளின் கீழ் 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து அறிக்கை அளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
[2/17, 16:04] Sekarreporter 1: பொய் வழக்கில் கைது செய்து காவல்துறையினரால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த மண்டபம் கிராமத்தை சேர்ந்த கே.ஜெயபாலன் என்பவர் தான் நடத்தும் உணவகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தன் சகோதரர்கள் ஜனார்த்தனன், ஆறுமுகம் ஆகியோருக்கு எதிராக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரை பெற்றதற்கான ரசீது வழங்காதது குறித்து ஜெயபாலனை கேட்டபோது, ஆய்வாளர் செந்தில்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னப்பன் ஆகியோர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

ஜெயபாலனுக்கு எதிராக ஆறுமுகத்திடம் புகார் ஒன்றை பெற்ற மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனமுத்து, அந்த வழக்கில் ஜெயபாலனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

காவல்துறையால் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ஜெயபாலம் கடந்த 2016ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், காவல்துறையினரால் ஜெயபாலன் தாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் நிரூபணமாவதாகவும், காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதும் நிரூபணமாவதாக குறிப்பிட்டு, ஜெயபாலனுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அந்த தொகையை ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னப்பனின் ஊதியத்திலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் என பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
[2/17, 16:23] Sekarreporter 1: சொத்துக்காக தாயை குண்டு வைத்து கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி களத்தூர் காவல் நிலைய எல்லையில் உள்ள அரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 74. இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ராமசாமி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மகன் மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்த முத்தம்மாள் தனியாக வீடு கட்டி அதில் வசித்து வந்தார்.

இளைய மகன் செல்வகுமார் தன்னை கவனித்துக் கொள்ளாததால் சில சொத்துக்களை மற்ற மகன்கள் மற்றும் மகள்கள் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். எஞ்சி இருக்கும் சில சொத்துக்களையும் மற்ற மகன்களுக்கு எழுத இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், முத்தமாளை கொலை செய்ய முடிவு செய்தார். தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வெடி மருந்தை வாங்கி வந்து, அதை ஒரு பெட்டியில் வைத்து அந்தப் பெட்டியைத் திறந்தால் வெடிக்கும் வகையில் உருவாக்கி அதனை முத்தம்மாள் வீட்டில் 21.1.2016 அன்று வைத்துவிட்டார். வயல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த முத்தம்மாள், வெடிகுண்டுபெட்டியை திறக்கும் போது அது வெடித்து படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முத்தம்மாள், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 22.1.2016 அன்று மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த வி.களத்தூர் காவல்துறையினர் செல்வகுமார், பூபதி சரவணன், லூகாஸ் அந்தோணி, பால்டப்பா என்கிற மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்குரைஞர் என். விஜயராஜ் ஆஜரானார். வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் லூகாஸ் அந்தோணி இறந்து விட்டார். அரசு தரப்பில் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 38 ஆவணங்கள் 18 சான்று பொருள்கள் குறியீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (17-02-2022) தீர்ப்பளித்த நீதிபதி கே. ஹெச். இளவழகன், எதிரி செல்வகுமார் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய்.20000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த குற்றத்தில் பூபதி, சரவணன், மணிகண்டன் ஆகியோர் குற்ற எண்ணத்துடன் செயல்படவில்லை என்று கூறி அவர்களை நீதிபதி விடுதலை செய்தார்.
[2/17, 19:29] Sekarreporter 1: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக கடந்த நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்த து.
இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தனர்..இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத் தனமாக உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார். விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 4 ம்தேதி ஒத்திவைத்துள்ளார்.

[2/17, 15:10] Sekarreporter 1: For all the foregoing reasons, the impugned proceedings passed by the respondent in G.D.C.No.E4/8210/2008 dated 18.09.2017, is quashed. Consequently, there shall be a direction to the respondent to forthwith reinstate the petitioner back in service HONOURABLE MR. JUSTICE M.S. RAMESH W.P.No.28777 of 2017 V.Kumar For Petitioner : Mr.M.Ravi For Respondent : Mrs.Karthikaa Ashok Standing Counsel for Chennai Corporation https://sekarreporter.com/for-all-the-foregoing-reasons-the-impugned-proceedings-passed-by-the-respondent-in-g-d-c-no-e4-8210-2008-dated-18-09-2017-is-quashed-consequently-there-shall-be-a-direction-to-the-respondent-to/
[2/17, 16:49] Sekarreporter 1: TN BJP Advocate Wing Secretary RC Paul Kanagaraj appeared for the 32 ABVP cadres bail before CMM Court, Egmore. Paul Kanagaraj argued that, all the arrested are students, some of them have exams, they come from poor back ground, Court should consider their career, etc. PP pointed out that half of the students have given false names and false addresses. https://sekarreporter.com/tn-bjp-advocate-wing-secretary-rc-paul-kanagaraj-appeared-for-the-32-abvp-cadres-bail-before-cmm-court-egmore-paul-kanagaraj-argued-that-all-the-arrested-are-students-some-of-them-have-exams-the/
[2/17, 19:21] Sekarreporter 1: https://youtu.be/gk4-GUGovvk
[2/17, 19:52] Sekarreporter 1: https://youtu.be/JYWSCytp7fg

You may also like...