Madras high court april 27 அயோத்தியா மண்டப வழக்கு

[4/26, 11:05] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரி வழக்கை த்ள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பை புலிகள் சரணாலயமாக 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நான்காவது புலிகள் சரணாலயமான சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்கள் செயல்படுவதாக கூறி, அவற்றை அகற்ற உத்தரவிட கோரி விலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 51 ரிசார்ட்கள் உள்ளதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்துக்கு, சத்தியமங்கலம் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் பதிலளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய வன விலங்குகள் வாரியத்திடமோ, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடமோ ஒப்புதல் பெறாமல், இந்த ரிசார்ட்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

வன உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ரிசார்ட்களை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் வனத்துறை அதிகாரிகள் உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் அனைத்து ரிசார்ட்களையும் சீல் வைக்க கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ரிசார்ட்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனவும், ரிசார்ட்களை சேர்க்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
[4/26, 11:53] Sekarreporter: விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்களே இருக்க வேண்டும் என்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை எனக் கூறி, அந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் ஜனவரி 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை நியமிக்க கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தரப்பில் அதன் செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த உத்தரவில் என்ன தவறு உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன தொடர்பு எனவும், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை அவர்கள் பறித்துச் செல்லவே விளையாட்டு சங்கங்களுக்குள் நுழைகின்றனர் என வேதனை தெரிவித்தனர்.

அணிக்காகவும், மாநிலத்துக்காகவும், தேசத்துக்காகவும் விளையாடும் வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும், போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் வீரர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதிவல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பயிற்சியாளர்களின் நடத்தை குறித்து நீதிமன்றத்தில் கூற முடியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை, விளையாட்டு சங்கங்களுக்கு தலைவராக ஏன் நியமிக்க வேண்டும் எனவும், விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்கள் ஏன் இச்சங்கங்களில் நுழைய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
[4/26, 15:09] Sekarreporter: அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, சிவில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறியுள்ளனர்.

மேலும், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த டிசம்பர் மாதம் நடந்த உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தர்ப்பில், கடந்த 2000ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளதாகவும், உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு, இன்று வரை உறுப்பினராக உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதை மறுத்து அதிமுக நிர்வாகிகள் தரப்பில், உறுப்பினர் அட்டையை புதுப்பித்ததாக கூறி மனுதாரர் தாக்கல் செய்த ஆவணம் போலியானது என வாதிட்டனர்.

மேலும், கட்சியில் ஒரு பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் மனுதாரர், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உண்மையான உறுப்பினர் அட்டையை தாக்கல் செய்ய மனுதாரர் ராம்குமார் ஆதித்தனுக்கு உத்தரவிட்டு, வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைத்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன் அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமிக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இருவரும் தொடர்ந்த வழக்கை எண்ணிட்டு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[4/26, 16:19] Sekarreporter: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

72 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

இதன்பின்பு, அ.தி.மு.க.வில் திடீர் பூகம்பம் ஏற்பட்டு இரு அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார்.

இதற்கிடையே இரு அணிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டது. இதன்பின்பு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி உத்தரவிட்டார்.

 

அதன்படி, சென்னை எழிலகம் கலச மகாலில் ஆணையம் செயல்பட தொடங்கியது. ஜெயலலிதா மரணம் குறித்து யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் மனு அளிக்கலாம் என ஆணையம் அறிவித்தது.

அதன்படி, 100-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்தனர். அவ்வாறு மனு அளித்தவர்களில் ஜெயலலிதா மரணம் குறித்து ஓரளவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என கருதிய 8 பேர்களை மட்டுமே ஆணையம் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது.

அதன்படி, இந்த விசாரணை 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கியது. மற்றபடி யார், யாரிடம் விசாரணை நடத்தினால் உண்மையை வெளிக்கொணர முடியும் என ஆணையம் கருதியதோ அவர்களுக்கெல்லாம் ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது.

 

அந்த வரிசையில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.

அதேபோன்று ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள் என மொத்தம் 159 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்ய இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலித்த ஆணையம், புகழேந்தி தனது வாக்குமூலத்தை ஆணையத்தில் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.

 

அதன்படி நேற்று ஆணையத்தில் புகழேந்தி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், ஜெயலிலதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லாதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சுமார் 1 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதுவரை மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் நேற்றுடன் விசாரணை நிறைவு பெற்றதாக ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்மூலம் சுமார் 4½ ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆணையத்தின் விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.

இன்று(புதன்கிழமை) முதல் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை ஆணையம் தொடங்குகிறது. ஜூன் மாதம் 24-ந் தேதியுடன் ஆணையத்தின் கால அவகாசம் முடிவடைகிறது. அதற்குள் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
[4/26, 16:19] Sekarreporter: நேற்று நடந்த இறுதி விசாரணையின் போது சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன், அப்பல்லோ தரப்பு வக்கீல் மைமூனாபாஷா ஆகியோர் பங்கேற்றனர். விசாரணைக்கு பின்பு அவர்கள் இருவரும், ஆணையத்தின் விசாரணை திருப்தியாக இருந்ததாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.

ஆணையம் விசாரணையை தொடங்கிய ஓராண்டில் மட்டும் 154 நாட்கள் விசாரணை மேற்கொண்டு 147 பேரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தது. அதேபோன்று விடுமுறை நாளான பல சனிக்கிழமைகளிலும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அப்பல்லோ தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மேற்கண்ட விவரத்தை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீதிபதி ஆறுமுகசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
[4/26, 16:19] Sekarreporter: விசாரணை நிறைவு பெற்றதாக ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமியிடம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடைபெற வாய்ப்பில்லை என தெரிகிறது.
[4/26, 16:19] Sekarreporter: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 6 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக்குழு ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றது. இந்தக்குழுவுக்கு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்கள், ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் அளித்த வாக்குமூலங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை இந்தக்குழு ஒரு மாதத்துக்குள் ஆணையத்துக்குள் அளிக்க உள்ளது. இந்த அறிக்கையையும் பரிசீலித்து ஆணையம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
[4/26, 16:40] Sekarreporter: சென்னை, ஏப்.27:
போதைப் பொருளை வைத்திருந்த கானா நாட்டைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு, தடை செய்யப்பட்ட போதைப் பொருளான ‘கொகைன்’ கடத்தும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் சென்னையில் தங்கியிருப்பதாக, சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்ப பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னை அண்ணா சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் சோதனை நடத்தினர். அப்போது, ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதி நாடான கானா நாட்டைச் சேர்ந்த குவாமி எபினேசர் (35) என்பவரை பிடித்தனர்.
விசாரணையில், சென்னையில் தங்கியிருந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து, தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 160 கிராம் ‘கொகைன்’ போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, போதை மற்றும் மன மயக்க பொருட்கள் தடை சட்டம் 1985ன் கீழ் வழக்கு பதிவு செய்து, குவாமி எபினேசரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற 1வது கூடுதல் நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு நடந்து வந்தது. விசாரணையில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், குவாமி எபினேசருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
[4/26, 17:23] Sekarreporter: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அயோத்யா மண்டபத்தை கடந்த 2013ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து இராம சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி வி.எம். வேலுமணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ம்ற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்ரீராம் சமாஜம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அயோத்த்தியா மண்டப நிர்வாகத்தை எடுத்து அரசு உத்தரவை எதிர்த்த வழக்கில் அரசுத்தரப்பில் எந்த பதில்மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார்.

மேலும், எந்த காரணமும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஸ்ரீ ராம் சமாஜத்தின் பள்ளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மதரீதியான நடவடிக்கைகள் நடந்ததால் அரசு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், மாற்று தீர்வு உள்ளதாகவும், தனி நீதிபதி முன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்றார்.

பல வகைகளில் நிதி வசூலித்த இந்த அமைப்பு, வருவாய் விவரங்களை, அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை எனவும் உத்தரவை எதிர்த்து எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மாற்று தீர்வு உள்ளது எனக் கூறி பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது எனவும், தனியார் அமைப்பான ஸ்ரீராம் சமாஜத்தின் நடவடிக்கைகளில் அரசு தலையிட முடியாது எனவும் தெரிவித்தார்.

2014ம் ஆண்டு இடைக்கால உத்தரவு வழங்கி விட்டு, 8 ஆண்டுகளுக்கு பின் மாற்று தீர்வு காணலாம் என கூற முடியாது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்கும்படி அனுப்பிய நோட்டீஸில் எந்த விவரங்களும் கூறப்படவில்லை என தெரிவித்தனர்.

பின்னர், குற்றச்சாட்டுக்களுக்கு முறையாக ஆதாரங்களை அளித்து, விளக்கம் கேட்டு தமிழக அரசு விசாரிக்கலாம் எனவும், விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்த நீதிபதிகள், அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவையும், அந்த உத்தரவை உறுதி செய்த உத்தரவையும் ரத்து செய்ய இருப்பதாக தெரிவித்து,
அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ஸ்ரீராம் சமாஜம் வசம் ஒப்படைக்க இருப்பதாக கூறி, வழக்கின் தீர்ப்பை நாளைக்கு தள்ளிவைத்தனர்.
[4/26, 17:47] Sekarreporter: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன் நடித்துள்ள பேய காணோம் என்ற படத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில், தயாரிப்பாளர் சுருளிவேல், இயக்குனர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் திட்டி மார்ச் 16ஆம் தேதி மீரா மிதுன் ஆடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தயாரிபாளர் சுருளிவேல் சென்னை மாநகர காவல்துறையில் அளித்த புகாரில், ஆடியோ வெளியிட்டு, சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியதாக சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினர் மார்ச் 19ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி தமிழ்ச்செல்வி என்கிற மீராமிதுன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆடியோ பதிவிட்டதாக கூறும் நாளில் துக்க நிகழ்வில் கலந்துகொண்டு இருந்ததாகவும், தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மீரா மிதுன், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் இதேபோல ஒவ்வொருவர் மீதும் அவதூறு பரப்புவதையும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களையும் பதிவிடுவதே மீராமிதுனுக்கு வாடிக்கை என்றும், தற்போது முதல்வர் குறித்தும் அவதூறு பரப்பிதுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே கைது செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, இதேபோன்று எப்போது எதற்காக பேசினார் என்றும், கைது செய்யப்பட்டாரா என்றும் காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் திரைத்துறையில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் முன்னேற்றைத்தை விமர்சித்து பேசிய புகாரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை விளக்கத்தை ஏற்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முன் ஜாமீன் கோரிய மீரா மிதுன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அவரை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
[4/26, 18:28] Sekarreporter: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தாக்கல் செய்யும்படி பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுனர் தாமதிப்பதால், அவரது முடிவிற்காக காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் நளினி உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாரா என, விளக்கமளிக்க நளினி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நளினி தரப்பு வழக்கறிஞர், நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடவில்லை எனக் கூறி, தடா சட்டபிரிவில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, நளினி தடா சட்டப்பிரிவில் தண்டிக்கப்பட்டாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக சிறப்பு நீதிமன்றத்தின் அசல் தீர்ப்பை சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...