Madras high court 20th orders admk case judge barath sakravarthi order sathiskumar j order

[6/20, 11:19] Sekarreporter: சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் மூலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட ஏழு கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நான்காம் வழித்தடம் அமைப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், வடபழனி வெங்கீஸ்வரர் கோவில், வடபழனி அழகர் பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கோவில் குளம் ஆகிய புராதன கோவில் கட்டிடங்கள் அமைந்துள்ளன.

இந்த கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்காமல், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய் நாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்பட்ட போதும்,
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு மேலான கோவில்களின் பட்டியலை தயாரித்து, புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்காததால், மெட்ரோ ரயில் 4 வது வழித்தடத்தில் உள்ள கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் தேர் திருவிழா உள்ளிட்ட கோவில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மெட்ரோ ரயிலுக்காக அரசு மற்றும் தனியார் சொத்துக்களை கையகப்படுத்துவதை விடுத்து கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத்தால் பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட ஏழு கோவில்களையும் புராதன கட்டிடங்களாக அறிவிக்க வேண்டும் எனவும், இந்த கோவில்கள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் நான்காம் வழித்தட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில் கட்டுமானங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், அவை பாதுகாக்கப்படும் எனவும், வணிக பயன்பாட்டுக்கான பயன்படுத்தப்பட்ட கோவில் நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[6/20, 11:19] Sekarreporter: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி மனுதாக்கல்.

வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுக்கக்கோரி அதிமுக சார்பில் முறையீடு.

புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கோரி கடந்த 7ம் தேதி மற்றும் 15ம் தேதி டிஜிபியிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – மனு.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் வழக்கு.

நீதிபதி சதிஷ்குமார்.
[6/20, 11:21] Sekarreporter: அதிமுக பொதுக்குழு கூடத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23ம் தேதி வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள். கலந்து கொள்ள்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக 2,500 பேர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதனால் இந்த கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி கடந்த ஏழாம் தேதி டி.ஜி.பி. மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த மனு மீது முடிவு எதும் எடுக்காததால் மீண்டும் கடந்த 15ம் தேதி மனு அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த மனுவும் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் மனுவில் குறிபிடப்பட்டுள்ளது.

எனவே வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு டி.ஜி.பி., ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த மனு வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்
[6/20, 11:27] Sekarreporter: டிஜிபியிடம் கொடுக்கப்பட்ட மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக பெஞ்சமின் கோர்ட்டில் தெரிவித்தார்
[6/20, 12:23] Sekarreporter: அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடைமுறைகளின் மூலம் பெற வேண்டுமே தவிர, லஞ்சம் கொடுத்து பணி பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசுத் துறைகளில் உயர் பதவிகளில் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக ஜெகன்நாதன், இந்துமதி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்ததுடன், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், கிளாஸ் 1 பதவிகளுக்கு 78 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்த சடகோபன் என்பவர், தான் கொடுத்த பணத்தில் இருந்து தற்போதைக்கு 10 லட்சம் ரூபாயை வழங்கக் கோரி, பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால், புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறி, பணத்தை வழங்க மறுத்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிடக் கோரியும் சடகோபன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, அரசு பதவி பெறும் பேராசையில் 78 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்த மனுதாரர், பணத்தை திரும்பப் பெறுவதற்கு, வழக்கு விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடவடிக்கைகள் மூலம் தான் பெற வேண்டுமே தவிர லஞ்சம் கொடுத்து எந்த பணியும் பெற முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும் எனக் கூறிய நீதிபதி, தேர்வு நடவடிக்கைகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர் நிலை என்னவாகும் என்ற குற்ற உணர்வு இல்லாமல், அனைத்தும் தெரிந்தே மனுதாரர் 78 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளதால் அவரது மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளார்.
[6/20, 12:45] Sekarreporter: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன் கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற மனு..

சென்னை உரிமையியல் நீதிமன்றம் மதியம் விசாரணை…

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு..

ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பிற்கு மட்டும்
மனுவின் நகல் வழங்கப்பட்டதாகவும் மற்ற நிர்வாகிகளுக்கு வழங்கவில்லை என முறையீடு…

திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன்உசேன்,செங்கோட்டையன்,தனபால் தரப்பிற்கு வழங்கப்படவில்லை என புகார்…

அனைவருக்கும் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டு மதியம் ஒத்திவைப்பு…
[6/20, 15:00] Sekarreporter: பொதுக்குழுவை ஒத்திவைக்ககோரி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ,இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சுக்கு எழுதிய கடிதம் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல்…

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை முன் கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற மனு..

சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரணை…

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு…

ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ,இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சுக்கு எழுதிய கடிதம் தாக்கல்…

பதில் மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி பிரியா உத்தரவு

கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளதாகவும்,
பதட்டமான சூழலில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்
இருதரப்பிற்கும் மோதல் ஏற்படும் -மனுதாரர்

ஏற்கனவே மாரிமுத்து என்பவர் தாக்கப்பட்டார்..

2001 டான்சி வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டபோது, பஸ் எரிக்கப்பட்டு 3 வேளாண் கல்லூரி மாணவிகள்
உயிரிழப்பு ஏற்பட்டது.. மனுதாரர்

இவர் கட்சி உறுப்பினர் கிடையாது என திண்டுக்கல் சீனிவாசன் தரப்பு வாதம்…

பதில் மனு தாக்கல் செய்ய விசாரணை
நாளை ஒத்திவைப்பு

You may also like...