Lingan Mha Advt: “எறும்பூரக் கல்லும் தேய்வது போல்” மாபெரும் கொடிய பழக்கத்தினால் , உலகக் கொடுமைகள் ( World evils ) யாவும் , தலைமுறை தலைமுறை யாக மக்களைத் தொடர்ந்தே வருகிறது. உலகம் சீர்பட்டுப் பசிப்பிணியற்று , கலகம் போர்கள்

[1/7, 06:48] Lingan Mha Advt: “எறும்பூரக் கல்லும் தேய்வது போல்” மாபெரும் கொடிய பழக்கத்தினால் , உலகக் கொடுமைகள் ( World evils ) யாவும் , தலைமுறை தலைமுறை யாக மக்களைத் தொடர்ந்தே வருகிறது. உலகம் சீர்பட்டுப் பசிப்பிணியற்று , கலகம் போர்கள் ஒழிந்து , சாந்தமும் சமாதானமும் உலகில் நிலவ வேண்டுமானால் , இவைகளுக்கு ஆதிகாரணங்களாகிய பழக்கங்களை மாற்றி , இக்கொடுமையின் பழக்கங்களுக்கு நேர் முறையான நன்மை பயக்கும் பழக்கங்களை‌ அனுசரித்து வரவேண்டும். பழைய உலகம் புது உலகமாக மாறவேண்டின் , இன்றைய உலகில் வாழும் மாந்தர்களுடைய பண்டைக்காலப் பழக்கங்களை மாற்றி அறிஞர்கள் முயற்சிக்க வேண்டும்.

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம். பக்கம் 1431 .

புதுவுலகம் / ஜூன் 1935.
[1/8, 06:20] Lingan Mha Advt: மதங்களும் , தத்துவ ஞானங்களும் கட்டிய உலகங்கள் யாவும் , மனம் போனவாறு , அதாவது சொல் சென்றவாறு , கட்டிய லோகங்களாகும்‌. கைலாயம் , பரமபதம் , வைகுண்டம் , மோட்ச லோகம் முதலிய கற்பனா உலகங்கள் , மனிதன் பேசவும் , எழுதவும் சக்திபெற்ற பிறகு , சொற்களைக் கொண்டு கட்டிய உலகங்களே. இச்சொற்களை மக்கள் கேட்டுள்ளார்களே யொழிய , யாரும் பார்த்ததுமில்லை ; யார் அனுபவத்திலும் வந்ததுமில்லை.

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம். பக்கம் 1432.

புதுவுலகம் / ஜூன் 1935.
[1/9, 07:40] Lingan Mha Advt: மதங்களும் , தத்துவ ஞானங்களும் கட்டிய உலகங்கள் யாவும் , மனம் போனவாறு , அதாவது சொல் சென்றவாறு , கட்டிய லோகங்களாகும்‌. கைலாயம் , பரமபதம் , வைகுண்டம் , மோட்ச லோகம் முதலிய கற்பனா உலகங்கள் , மனிதன் பேசவும் , எழுதவும் சக்திபெற்ற பிறகு , சொற்களைக் கொண்டு கட்டிய உலகங்களே. இச்சொற்களை மக்கள் கேட்டுள்ளார்களே யொழிய , யாரும் பார்த்ததுமில்லை ; யார் அனுபவத்திலும் வந்ததுமில்லை.

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம். பக்கம் 1432.

புதுவுலகம் / ஜூன் 1935.
[1/9, 09:55] Lingan Mha Advt: வருஷத்தில் 365 நாள் இருக்கின்றன. சில நாட்களில் சூரியனும் பூமியும் , சந்திரனும் ஒன்றையொன்று சுற்றி வருவதால் இரண்டும் ஒன்றாக உதயமாகும். அல்லது ஒன்றுக்கு பின்னால் ஒன்று உதயமாகும். அந்தச் சமயங்கள் பூமியைச் சந்திரன் சுற்றி வருவதால் நேரிடும். இதனை உணராது இந்த நாட்களை அமாவாசை என்றும் , பருவமென்றும் பயந்து , அந்த பயத்தைப் போக்க விரதமிருக்கின்றார்கள். கிருத்திகை என்பது ஒரு நட்சத்திரக் கூட்டம் ஓர் இடத்தில் வரும் நாள். அமாவாசை சூரியனும் , சந்திரனும் ஒன்றாக உதயமாகும் நாள். இந்நாட்களில் யொதொரு சுபகாரியங்கள் செய்யக் கூடாதாம்! இந்திய மக்களைத் தவிர மற்ற உலக மக்களில் யாரும் அமாவாசை , கிருத்திகை , பரணி நாட்களில் உபவாசமிருப்பதுமில்லை. அந்த நாட்களை ஏதேனும் விசேடமாகக் கருதுவது மில்லை.

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம். பக்கம் 1437 1438 .

புதுவுலகம் / ஜூன் 1935.
[1/10, 06:32] Lingan Mha Advt: உலகில் பொருளுடமை இரண்டு வகைப்படும். ஒன்று தனி உடைமை , மற்றொன்று கூட்டுடைமை. ஆனால் மனிதர்கள் தனி உடைமையையே விரும்புகிறார்கள். கூட்டுடைமைப் பொருள் சிலருக்கு சொந்தமாயிருப்பினும் , அதற்குரிமையாளரெனக் கூறப்படும் ஒவ்வொருவரும் , அக் கூட்டுடைமையைத் தனிமையில் தானே அடைய வேண்டுமென்று விரும்புகிறான். காரணம் அவனுக்கிருக்கும் உடைமைப் பைத்தியமே யாகும்.

இந்த பைத்தியத்திற்கு எல்லை இருப்பதில்லை. தான் விரும்பியபடி , கூட்டுடைமைப் பூராவைவும் அடைந்துவிட்ட பிறகும் , அவனுக்கு திருப்தி ஏற்படுவதே கிடையாது. மேலும் பொருளை , ஒன்று , பத்து , நூறு , ஆயிரம் , கோடியாக பெருக்கிக்கொள்ள முயல்கிறான். அவ்வாறு பெருக்கிய பின்னரும் அவன் மனம் சாந்தியடைவதில்லை. தானன்றி வேறொருவன் சிறிது பொருளுடையவனாயினும் , அந்த அயலானின் பொருளையும் தானே அபகரித்து , அதற்குத் தானே உரிமையாளராக விரும்புகிறான். இதுவே தனி உடைமையை விரும்பும் மனிதனின் கோரிக்கையாகும். இத்தகைய பேராசைப் பேயனுக்கு வாழ்க்கையில் ஒருபோதும் திருப்தி ஏற்படாது. அவன் வாழ்க்கை அவலமானதாகவே முடியும். இத்தகைய பேராசையைப் பைத்தியமென்றல்லாது வேறென்னென்று கூறுவது?

சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம். பக்கம் 1439.

புதுவுலகம் / ஜுன் 1935.

You may also like...