Judges R Sureskumar and sounder j order HRNC /TR Ramesh case

தமிழகத்தில் உள்ள 9,525 கோவில்களின்
கணக்குகள், தணிக்கை செய்ய தாக்கல் செய்யப்படாதது ஏன் என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களின் வருடாந்திர வருவாய்,செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக் கோரி டி.ஆர் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அமர்வு, கோவில் தணிக்கை அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இந்து அறநிலைய ஆணையர் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படாதது குறித்து கேள்வி எழுப்பியது.

மேலும், அறநிலையத் துறை இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள 9 ஆயிரத்து 525 கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், தணிக்கைக்காக இந்த கோவில்களின் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காதது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

அதேபோல, பழனி, திருச்செந்தூர் போன்ற 50 பெரிய கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அவற்றை விரைந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன? இன்னும் எத்தனை கோவில்களின் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டியுள்ளது? எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது? எத்தனை கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version