Chithambaram temple case judges R Sures kumar and sounder j

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனத்திற்கு சில மாற்றங்களை செய்தால் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வரை தரிசனம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக இந்து அறநிலைய துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக இந்து அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார், சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து அறநிலைய துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் கனகசபை தரிசனத்திற்காக வார நாட்கள், வார இறுதி நாட்கள், மற்றும் திரு விழா நாட்களில் பக்தர்கள் வருகை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி, கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு முன்பு வரை கனக சபையின் கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும், அதே நடைமுறையை பின்பற்றினால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் 5 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரம் பக்தர்களும், திருவிழா நாட்களில் 10 ஆயிரம் வரை பக்தர்கள் எண்ணிக்கை வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால பூஜை நடைப்பெறாத நேரங்களில் கனக சபை மீது ஏறி ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை நடராஜரை வழிப்பட அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் வாதங்களை வைத்த இந்து அறநிலைய துறை தரப்பு, கனக சபையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் பக்கவாட்டில் கூடுதலாக மர இரும்பு படிகள் அமைத்து உள்ளே மற்றும் வெளியே செல்லும் வகையில் பக்தர்கள் தரிசன மேற்கொள்ள ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இதனால் கூட்ட நெரிசல் இன்றி காலவிரயமின்றி பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளலாம் என சில பரிந்துரைகளையும் சில புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

மேலும் தற்போது உள்ள ஏற்பாடுகளின் படி நாள் ஒன்றுக்கு 1300 பக்தர்கள் மட்டும் கனக சபை தரிசனம் மேற்கொள்ளும் நிலையே இருப்பதாகவும், கனக சபையின் மேற்கு மற்றும் கிழக்கு புறங்களில் தரிசனத்திற்கு அனுமதித்தால் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வரை கனக சபை தரிசனம் மேற்கொள்ளலாம் எனவும் இந்து அறநிலைய துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், இது தொடர்பாக பொது தீட்சகர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை
செப்டம்பர்11 ம் தேதி தள்ளி வைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version