In the web‑casting tender challenge, Madras High Court directed the Election Commission to reply .

[17/03, 07:14] sekarreporter1: வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்வது தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் நாளைக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதற்காக தமிழகத்தில் 75 ஆயிரம் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவும், வாக்கு எண்ணிக்கை மையங்களை கண்காணிப்பதற்காகவும், வெப் காஸ்டிங் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம், டெண்டர் கோரியது.

இந்த டெண்டரில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் விற்றுமுதல் (turnover) கொண்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது.

இந்த நிபந்தனைகளை எதிர்த்து சென்னையை சேர்ந்த நெட் செக்யூர் லேப்ஸ் ப்ரைவேட் லிமிடட் என்ற நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ் ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், தமிழகம் உள்ளிட்ட 9 மாநில தேர்தல்களில் தங்கள் நிறுவனம் வெப் கேமராக்களை பொருத்தி, வெப் காஸ்டிங் செய்த நிறுவனம் என்றும் தங்கள் நிறுவனம் இந்த டெண்டரில் கலந்து கொள்ள விடாமல் தடுக்க, 100 கோடி ரூபாயை விற்று முதல் கொண்டிருக்க வேண்டும் என நியாயமற்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டது.

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு வெப் காஸ்டிங்குக்காக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெப் கேமராக்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெப் கேமராக்கள் இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

விற்று முதல் 100 கோடி ரூபாய் என நிபந்தனையால் தங்களை போன்ற சிறு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், தமிழகத்தில் நடந்தப்பட்ட கடந்த தேர்தலில் 45 ஆயிரம் வெப் கேமராக்களை மட்டுமே பயன்படுத்திய நிலையில், வரும் தேர்தலில் இதை 3 மடங்காக அதிகரித்து 1 லட்சத்து 50 ஆயிரம் கேமராக்களை பயன்படுத்த இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மனுதாரர் டெண்டரில் கலந்து கொள்ளவில்லை என்றும் நாளை பிற்பகல் 3 மணிக்கு இந்த டெண்டர் திறக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெண்டர் நிபந்தனைகளை திருத்த அனுமதித்தால் தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, இது தொடர்பாக நாளைக்குள் பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.
[17/03, 07:15] Meta AI: In the web‑casting tender challenge, Madras High Court directed the Election Commission to reply by tomorrow and deferred the hearing.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com