Ilango Dk: விசாரணை, அங்காடி தெரு, வழக்கு எண் 18/01 என்ற வரிசையில் மிக சிறந்த படமாக அமைந்தது ஜெய் பீம். நீதிபதி சந்துரு, வழக்கறிஞர் ஆக இருக்கும போது, போலீஸ் லாக்கப்பில் நடந்த கொலையை

[11/2, 11:01] Ilango Dk: விசாரணை, அங்காடி தெரு, வழக்கு எண் 18/01 என்ற வரிசையில் மிக சிறந்த படமாக அமைந்தது ஜெய் பீம். நீதிபதி சந்துரு, வழக்கறிஞர் ஆக இருக்கும போது, போலீஸ் லாக்கப்பில் நடந்த கொலையை உயர் நீதி மன்றத்தில் நிரூபித்து நீதி வாங்கி தருவதே கதை. இருளர் இன மக்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டி உள்ளார்கள். இருளர் இன மக்களுக்கு அறிவொளி இயக்கம் மூலம் பாடம் கற்பிக்க வரும் டீச்சர், அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வருகிறார். அப்போது அந்த ஊர் நாட்டாமை, ஏற்கனவே ஓட்டுக்காக கண்ட ஜாதிக்காரன் காலில் விழுகிரோம், இப்பொழுது இவர்களையும் வாக்காளர் ஆக்கி, இவர்கள் காலிலும் விழ வேண்டுமா? முதலில் அறிவொளி இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுவார். இது போன்ற, இருளர் இன மக்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டி உள்ளனர். வக்கீல் சந்துரு முயற்சியின் தொடர்ச்சியாக 1000 வழக்கு வரை இருளர்களுக்கு நடத்தி உள்ளது ஒரு அமைப்பு என்று எண்ட் கார்டு போடுகிறார்கள். வக்கீல் சந்துரு, இது போன்ற மனித உரிமைகள் மீறல் வழக்குக்கு, ஃபீஸ் வாங்கியது இல்லை என்று முடிக்கிறார்கள். ஆங்கிலத்தில் இது போன்ற கறுப்பின மக்களுக்கு வாதாடிய உண்மை வக்கீல் படம் உண்டு. தமிழில் இது புதிது. தியேட்டரில் வந்து இருக்க வேண்டும். அமேசான் பிரைம் இல் காண கிடைக்கிறது. கொண்டாட பட வேண்டியது, சூர்யாவின் ஜெய் பீம் படம்
Sree Paramasivam.
[11/2, 11:37] Sekarreporter1: 👍🏾

You may also like...