http://youtube.com/post/UgkxdhFsGM3VLdA4f89ezTh0Nc5jIXZubpIc?si=rF9uxHlSYSEh9Thi [28/04, 21:58] sekarreporter1: [28/04, 21:27] Mha Ec Gobu Two: முற்பட்ட சமூகம் என புறந்தள்ளப்பட்ட நைனார் சமூகத்தை சார்ந்தவர் இவர். அதாவது அரசின் சலுகைகள் எதுவும் வழங்கப்படாத ஒரு சமூகத்தின் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர் இவர்.
[28/04, 21:58] sekarreporter1: http://youtube.com/post/UgkxdhFsGM3VLdA4f89ezTh0Nc5jIXZubpIc?si=rF9uxHlSYSEh9Thi
[28/04, 21:58] sekarreporter1: [28/04, 21:27] Mha Ec Gobu Two: முற்பட்ட சமூகம் என புறந்தள்ளப்பட்ட நைனார் சமூகத்தை சார்ந்தவர் இவர். அதாவது அரசின் சலுகைகள் எதுவும் வழங்கப்படாத ஒரு சமூகத்தின் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர் இவர்.
வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு எனும் அடிப்படையில் இந்த முறை இவருக்கே எனது ஆதரவு.
நான் இவரை ஆதரிக்க இதுமட்டுமே காரணமல்ல. இன்னும் சில காரணங்களும் உண்டு.
ஆனாலும், யாருக்கும் கூழை கும்பிடு போடாத துணிச்சலான வழக்கறிஞர் இவர்.
வழக்கறிஞர்கள் சங்கமென்பது வழக்கறிஞர்கள் நலனையொட்டிதான் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். கடந்த முறை நீண்ட தாமதத்திற்கு பிறகு சங்க தேர்தல் இவர் தொடுத்த வழக்கினாலயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஒரு சாரார் மட்டுமே மெட்ராஸ் பார் அசோசியேஷன்ஸ் என்கிற பழமையான வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக முடியும் என்கிற கடுமையான கட்டுப்பாட்டை வழக்கு தொடுத்து மாற்றிக் காட்டியவர் இவர்.
தேர்தலுக்கு
மட்டும் நீதிமன்றத்தை எட்டிப்பார்ப்பவரல்ல .
இவரை தினந்தோறும் நீதிமன்றங்களில் பார்க்கலாம்.
சட்டம் கற்றுவிட்டோம் என கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடக்கூடியவர் அல்ல. எதையும் சட்டத்தின் வழியில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று சாதிக்கக்கூடியவர்.
அனைத்து வழக்கறிஞர்களிடமும் அன்போடும் மரியாதையோடும் பழகக்கூடியவர்.வழக்கறிஞர்கள் சார்ந்த பிரச்சனைகளை நீதிபதிகளிடமும்,காவல் அதிகாரிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும் நேர் நின்று தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர்.
சட்டம் பற்றி, குறிப்பாக அரசியலமைப்பு சட்டம் குறித்து அரசு அதிகாரிகளுக்கு பாடமெடுப்பவர்.
இவர் போன்றவர்கள் தான் சங்கத்தின் நிர்வாக பொறுப்பை ஏற்க வேண்டும் என்கிற எனது நிலைப்பாட்டின் படி இந்த முறை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் *துணைத்தலைவர்* பதவிக்கு போட்டியிடும் # *மகாவீர் சிவாஜி* அவர்களையே நான் ஆதரிக்கப்போகிறேன். இவருக்கே எனது வாக்கையும் செலுத்தப்போகிறேன்.
சங்க நலன்காக்க சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இவரை ஆதரித்து வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன் உங்கள் சகோதரர்
வழக்கறிஞர் V.S.கோபு.
[28/04, 21:53] sekarreporter1: 👍