You may also like...
-
[11/1, 11:45] Sekarreporter1: https://youtu.be/KaOC4S90IUc [11/1, 12:10] Sekarreporter1: [11/1, 12:09] Sekarreporter1: https://youtu.be/QUrymSFtnb8 [11/1, 12:09] Sekarreporter1: Advocate general shanmugasundaram Interview regarding vanniyar reservation case madurai hc order [11/1, 12:11] Sekarreporter1: https://youtu.be/QUrymSFtnb8 [11/1, 12:19] Sekarreporter1: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினை சார்ந்த 25க்கு மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ம.க. தலைவர் ராமதாஸ் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதாகவும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என வாதம் வைக்கப்பட்டது. தமிழக அரசுத்தரப்பில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983 ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் பேர் வன்னியர்கள் என்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு, வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?? அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதா? மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டிற்காக அளவுகோல்கள் எதுவும் இல்லாமல் அரசு இடஒதுக்கீடு வழங்க முடியுமா??? உள்ளிட்ட 6 கேள்விகளை எழுப்பி அரசிடம் விளக்கம் கேட்டிருந்தாகவும் ஆனால் அரசு இந்த கேள்விகளுக்கு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கி அரசு பிறபித்த சட்டத்தை ரத்து செய்வதாகவும், சட்டம் செல்லாது எனவும் உத்தரவிட்டனர். அப்போது இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யும் வகையில் தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
by Sekar Reporter · Published November 1, 2021
-
-
வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றவரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி
by Sekar Reporter · Published March 15, 2022