Former minister case senior adv Ragavachary argued cj bench
-
G[22/08, 16:35] Sekarreporter: கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களையும், போலி வாக்காளர்களின் பெயர்களையும் நீக்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், போலி வாக்காளர்களையும், இறந்த வாக்காளர்களின் பெயர்களையும் பட்டியலில் இருந்து நீக்காவிட்டால் அது தேர்தல் முடிவுகளில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கள்ள ஓட்டு போடுவதற்கு வழிவகை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டியது வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளின் கடமை என்றும் பெரும்பாலான வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகளாக திமுகவினரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
[22/08, 16:35] Sekarreporter: [22/08, 16:35] Sekarreporter: Former minister case senior adv Ragavachary argued cj bench
[22/08, 16:35] Sekarreporter: .