Former Miinister Jayakumar: Flash news சசிகலா மீதான புகார் குறித்து வரும் 2 ம் தேதி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

[1/20, 22:00] Former Miinister Jayakumar: Flash news

சசிகலா மீதான புகார் குறித்து வரும் 2 ம் தேதி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதிமுகவின் பெயரை சசிகலா தொடர்ந்து பயன்படுத்துவதாகவும், இது தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயல் எனவும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க மாம்பலம் காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று, 17 வது நீதித்துறை நடுவர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சசிகலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இன்று மாம்பலம் காவல் ஆய்வாளர் தரப்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சசிகலா மீதான புகார்களை உரிமையியல் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக்கொள்ளுமாறு குறிப்பிட்டும், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிமுக தரப்பு வாதங்களை கேட்ட 17வது நீதித்துறை நடுவர், சசிகலா மீது சொல்லப்பட்டுள்ள புகார்கள் குறித்து குற்றவியல் நடைமுறை சட்டம் 200 இன் கீழ் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், வருகிற 2 தேதி புகார்தாரர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கலாம் என்று வழக்கை ஒத்திவைத்தது. இதனை வருகிற 2ம் தேதி சசிகலாவின் மீதான புகார்கள் என்ன என்பது குறித்து நேரிலோ அல்லது, வீடியோ கான்பரசிங் மூலமோ விளக்கமளிக்க உள்ளார். ஏற்கெனவே சசிகலாவின் செயல்பாடுகளை திமுக வின் B டீம் என விமர்சித்திருந்த நிலையில், தற்போது சச்சிகலா மீது காவல் துறை விசாரிக்க முடியாது என்று சொல்லியருப்பது திமுகவின் B team
சசிகலா என்பதையே குறிக்கிறது.
[1/20, 22:02] Sekarreporter 1: Send video interview regarding this order sir
[1/20, 22:02] Sekarreporter 1: Or audio

You may also like...