E pass mhc order
வால்பாறையில்
பாஸ் நடைமுறையை நாளை முதல் அமல்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து மேற்கொண்ட தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது..
வன சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஊட்டி, கொடைக்கானலில் இ பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது
இந்நிலையில் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வால்பாறையிலும் நவம்பர் 1 ம் தேதி முதல் இபாஸ் நடைமுறை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு
வழக்கறிஞர் சீனிவாசன், வால்பாறையில் இ பாஸ் நடை முறையை அமல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி துரிதமாக செயல்பட்ட அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் இந்த நடைமுறையை அமல்படுத்தியது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 28 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.