Devanathan bail case judge jayachandren orders reserved

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையால் எந்த வித முன்னேற்றமும், பயனும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேவநாதன் தரப்பில், நீதிமன்ற உத்தரவின் படி 76 சொத்துப்பட்டியல் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், தனக்கு சென்னை, திருவள்ளுர் உள்பட பல்வேறு இடங்களில் 136 ஏக்கரில் சுமார் 440 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான சொத்துக்கள் உள்ள நிலையில், சொத்து மதிப்பை 30 கோடியாக குறைத்து காட்டி, ஓராண்டிற்கு மேல் சிறையில் உள்ள தன்னை தொடர்ந்து சிறையில் வைக்க அரசு முயற்சித்து வருவதாக தேவநாதன் தரப்பில் senior adv sts moorthy தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த பெரும்பாலான சொத்துக்கள் வில்லங்க சொத்துக்கள் என்பதால் ல் அதன் மூலம் தங்களுக்கு நிவராணம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, தேவநாதன் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நடத்திய விசாரணையால் எந்த பயனும் ஏற்படவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், வழக்கிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லை என தெரிவித்த நீதிபதி , வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com