Category: Uncategorized

கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயிலுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் 6 மாதத்திற்குள் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அறநிலையத் துறை ஆணையர், அறநிலையத் துறை வேலூர் இணை ஆணையர், அறநிலையத் துறை திருப்பத்தூர் ஆய்வாளர் ஆகியோர் மீது எஸ்.நடராஜன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு, நீதிமன்ற உத்தரவை 6 மாதங்களில் அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, அறநிலயத்துறை ஆணையர், இணை ஆணையர், ஆய்வாளருக்கு உத்தரவிட்டது. அதேபோல, நிலங்களை கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்வதில் ஓராண்டுக்கு மேல் காலதாமதம் செய்த திருப்பத்தூர் தாசில்தாரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தில் உள்ள சென்ன...

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 14 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், பூங்கா, கடைகள் என,...

Judge sathiskumar tender case stay extendeded

சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள, 50வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, ஜனவரி 19ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில், அடுத்தாண்டு 50வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சி நடக்க...

தேசிய லோக் அதாலத்தில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 884 வழக்குகளில், 857 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 260 ரூபாய் தீர்வுத் தொகை வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 884 வழக்குகளில், 857 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 260 ரூபாய் தீர்வுத் தொகை வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com