Case against former minister Valarmatgi quashed judge Jegathes chandra for former minister advt Thamilselvan

[06/12, 19:01] Sekarreporter:

Madras High Court | வளர்மதியின் மகன் வழக்கு ரத்து! | Kumudam News


[06/12, 19:01] Sekarreporter: 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் ஆர்.வளர்மதியின் மகன் மீது
பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.வளர்மதி போட்டியிட்டார்.

அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சித்ததாக வளர்மதியின் மகன் மூவேந்தன் உள்ளிட்டோருக்கு எதிராக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மூவேந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன், எந்த வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் அரசியல் காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இரண்டு ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி,மூவேந்தன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version