Admk party case afternoon hearing mhc

அதிமுகவின் உட்கட்சியின் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி அக்கட்சியின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடும் என நீதிபதி அனுமதித்துள்ளார்.

அதிமுகவின்ய செற்க்குழுக்கூட்டம் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. அதில் உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் ஆணையர்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் 3 மற்றும் 4 ஆகிய தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது எனவும் வேட்பு மனு பரிசீலனை 5-ம் தேதி காலை 11.25 மணிக்கு நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுதல் 6-ம் தேதி மாலை 4 மணியோடு நிறைவடைகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் 7-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் 8 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் உட்கட்சியின் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி அக்கட்சியின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் டிசம்பர் 2 நடந்த அதிமுக பொதுக் குழுவில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்திற்கு விரோதமாக அறிவிக்கபட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கான தேர்தல் 7ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கின்றனர்.

இந்த அறிவிப்பு என்பது முறையாகவும் கட்சியின் சட்ட விதிகளின் படியும் இல்லை தேர்தலுக்கு முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதிகள் இந்த அறிவிப்பின் மூலம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

சங்கங்கள் பதிவுச் சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல் பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் அறிவித்து செயல்படுகிறார்கள்

மேலும் தேர்தலுக்கான உறுப்பினர்கள் முறைபடுத்தப்படவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது எனவும் வாக்களிக்க யாரிக்கு தகுதி உள்ளது. வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட எந்த விபரங்களும் முறையாகவும் சட்ட விதிகளின் படி வெளியிடவில்லை.வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்பட்டு வெளியிடவில்லை.

எனவே விதிகளின் படி இல்லாத தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அதிமுக உட்கட்சி தேர்தலை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமித்து, 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். என்னை கடந்த 2018 பிப்ரவரியில் தன்னை நீக்கிய பிறகு, ஏப்ரலில் தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. எனவே தன்னை நீக்கியது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். எனது நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், சட்ட விதிகளின் படி அறிவிக்காத தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும், ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு கே.சி பழனிச்சாமி முன்பு அவரின் வழக்கறிஞர் முறையீடு செய்தார். இதனை ஏற்ற நீதிபதி இன்று பிற்பகல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...