https://x.com/i/status/2038536815095984352 [30/03, 16:09] sekarreporter1: “வாக்கு செலுத்திய பிறகு மை வைத்த விரலை காட்டும் வாக்காளர் (ETV Bharat Tamil Nadu)
[30/03, 16:09] sekarreporter1: https://x.com/i/status/2038536815095984352
[30/03, 16:09] sekarreporter1: “வாக்கு செலுத்திய பிறகு மை வைத்த விரலை காட்டும் வாக்காளர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team
Published : March 30, 2026 at 1:27 PM IST

2 Min Read

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தேர்தல் இன்று (மார்ச் 30) காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 1 லட்சத்து 540 வழக்கறிஞர்கள் வாக்களிக்க உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்தல், 2018-ம் ஆண்டுக்குப் பிறகு இன்று நடைபெறுகிறது. அதாவது, 7 ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்காக மொத்தமாக 168 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் 166 மையங்களும், புதுச்சேரியில் 2 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்ற வளாகங்களில், காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மொத்தமாக 23 உறுப்பினர்கள் பதவிக்காக வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்த உறுப்பினர்களில் குறைந்தது 5 பேர் பெண்களாக இருக்க வேண்டும். 2 பேர் நியமன உறுப்பினர்களாகவும் பின்னர் தேர்வு செய்யப்படவுள்ளனர். முன்னுரிமை வாக்குகள் அடிப்படையிலும், 1,2,3 என்ற எண்கள் அடிப்படையிலும் வழக்கறிஞர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தலாம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, தேர்தல் நடத்தும் அதிகாரியாக இமாச்சல் பிரதேச உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தர், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என் பாட்ஷா, மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் அடங்கிய குழு இந்த தேர்தலை நடத்துகிறது.
இதற்காக, தமிழகத்திலேயே அதிகமான வாக்காளர்களை கொண்ட சென்னை மாவட்டத்தில் 30 ஆயிரம் வழக்கறிஞர்களும், அதற்கு �