ustice must go beyond the mere application of law and must reflect human values, fairness, and accessibility for every citizen, said Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar at the Vellore Institute of Technology (VIT) in the city on Sunday.

 

பத்திரிக்கை செய்தி

விஐடி சென்னை, தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து ‘நீதிக்களம்’ என்ற இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கை நடத்தியது. ‘வளர்ச்சியடைந்த இந்தியாவில் சட்டத்துறையி்ன் பங்களிப்பு’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கின் நிறைவு விழா 22.5.2026 அன்று விஐடி சென்னையில் நடந்தது. விழாவில், விஐடி துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக கவர்னர்(பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசும்போது,” இந்தியாவில் 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், நம் நாட்டில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தான். குறைவான மக்களே நீதி்த்துறையை அணுகி நீதியை பெற கூடிய நிலை நீடித்து வருகிறது. கல்வித்துறை சார்ந்த வழக்குகளும் நிலுவையில் இருந்து வருகிறது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை அடைய வேண்டும் என்றால் நீதித்துறையும் வளர வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்தால் தான் உண்மையான வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க முடியும். இளைஞர்கள் ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டும். மனிதநேயமற்ற சமூகம் முன்னேறிய சமூகமாக கருதப்படாது. அதனால், மாணவர்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டு எளிய மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.
விழாவில் கவுரவ விருந்தினரான சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி குமரேஷ் பாபு பேசும்போது, “ நாடு வளர்ச்சி அடைய மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பு மட்டுமின்றி பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்” என்றார்.
விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் பேசும்போது” மாணவர்கள் இந்தியாவின் எதிர்காலமாக திகழ்கின்றனர். இந்தியாவில் 5.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில், 2 லட்சம் வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக தேக்க நிலையில் உள்ளது. நீதித்துறையினை ஏழைகள் அணுகக்கூடிய சூழல் இல்லை. வசதிப்படைத்தவர்கள் மட்டுமே அணுகக்கூடிய நிலை உள்ளது. உயர்கல்வி வளர்ச்சிக்காக அரசு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இளைஞர்கள் இந்தியாவின் பலமாக விளங்கி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு சிறந்த உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்“ என்றார்.
இந்த கருத்தரங்கில் சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கருத்தரங்கின் தொடக்க விழாவில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவர்த்தி, எல்.சி. விக்டோரியா கவுரி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

புகைப்பட விளக்கம்:
விஐடி சென்னை, தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய ‘நீதிக்களம்’ என்ற இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக கவர்னர்(பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன், விஐடி துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். அருகில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி குமரேஷ் பாபு உள்ளார்.

 

 

Home
News
Cities
Chennai
Delay in judicial process has affected important decisions, says T.N. Governor
Updated – March 22, 2026 11:58 pm IST – Chennai

The Hindu Bureau
Google Preferred Source
Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar speaking at a conference jointly organised by VIT Chennai and FOTLAWS in the city on Sunday.
Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar speaking at a conference jointly organised by VIT Chennai and FOTLAWS in the city on Sunday. | Photo Credit: J. Johan Sathyadas

Justice must go beyond the mere application of law and must reflect human values, fairness, and accessibility for every citizen, said Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar at the Vellore Institute of Technology (VIT) in the city on Sunday.

Speaking at the valedictory function of ‘Needhikkalam 2026 – Jurisprudence for 2047 igniting legal minds for a Developed Bharat’ he said, “While law is a structured framework subject to interpretation, justice is the ultimate goal that must be delivered with compassion and a human touch.”

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com