பராசக்தி பட கதை யாருது?

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn பிக்சர்ஸ் தயாரித்துள்ள “பராசக்தி” திரைப்படத்துக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, படக்குழு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன் ஆகியோருடன் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் @lawyervijayan ஆஜராகி வாதிட்டார்.

அவர்களது வாதங்களில் 2023ஆம் ஆண்டு புறநானூறு என்ற பெயரில் படப்பணிகளை தொடங்கிய நிலையில், தன் கதை போல இருப்பதாக கூறும் மனுதாரர், 2025 டிசம்பர் மாதம் தான் தாமதமாக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டன் நோக்கம் பணம் பறிப்பதே என்றும் வாதிட்டார்.

பதிப்புரிமை மீறல் என்று கூறும் மனுதாரர், வழக்கில் அதுதொடர்பான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும், அதனால் வழக்கே செல்லாதது என்றும் வாதிட்டார்.

தங்களது கதை வேறு, மனுதாரரின் கதை வேறு என்று குறிப்பிட்ட @lawyervijayan வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டத்தை கதைக்களமாக கொண்டு பராசக்தி உருவாக்கப்பட்டதாகவும் வாதிட்டார்.

இந்தி திணிப்பை எதிர்ப்பை 1965ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அந்த வரலாற்று சம்பவங்களில் வைத்தே படமெடுக்கப்பட்டுள்ளதாகவும், வரலாற்றுச் சம்பவங்களுக்கு எப்போதுமே யாரும் பதிப்புரிமை கோர முடியாது எனவும் அழுத்தமாக வாதிட்டார்.

மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ராமசாமி என்பவரிடம் ஆலோசகாராக கொண்டு, கதையை உருவாக்கி உள்ளதாவும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் @lawyervijayan வாதிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com