Cong mla case mhc directed to file counter

தேர்தல் ஆணைய நோட்டீஸை எதிர்த்து வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ அசன் மவுலானா தாக்கல் செய்த .வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில்  காங்கிரஸ் சார்பில்  அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதுசம்பந்தமாக 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.

இந்த விளம்பரங்களுக்கான செலவுத்தொகை 33 லட்சம் ரூபாயை செலவுக்கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2021 ம் ஆண்டு அசன் மவுலானாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விளக்கமளித்த நிலையில், தேர்தல் செலவு கணக்கை முறையாக சமர்ப்பிக்காததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு, 2023 ம் ஆண்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கும் பதிலளித்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், 2025 ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகக் கூறி, அசன் மவுலானாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், தேர்தல் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என 2023 ம் ஆண்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், அந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரியும், அசன் மவுலானா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீதர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 2023 ம் ஆண்டு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், விசாரணைக்கு ஆஜராவதை விடுத்து நோட்டீஸை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையிலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அவரது கோரிக்கையை ஏற்று அக்டோபர் 13 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கிய போதும் இந்த விளம்பரங்கள் தனக்கு தெரியாமல் வெளியிடப்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வில்லை. இந்த விசாரணைக்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது, தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்கு பதில் அளிக்க அசன் மவுலானா தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com