Tvk மதுரை ஹைகோர்ட் கிளை அனுமதி மறுப்பு

கரூர் துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தவெக தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் வெள்ளிக் கிழமை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை வர உள்ளது.

கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 27 ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் 41 அப்பாவி உயிர்கள் பலியானது துரதிர்ஷ்டவசமான ஒரு சம்பவம் என்றும் இச்சம்பவம், உள்ளுர் அரசியல் வாதியின் அறிவுறுத்தல்படி காவல்துறையினரும் உள்ளூர் ரவுடிகளும் இணைந்து செயல்படுத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் பேசி கொண்டிருந்த போதே சில சமூக விரோத சக்திகள், விஜய் மீதும் அவரது பேச்சைக் கேட்கக் காத்திருந்த பொதுமக்கள் மீதும் செருப்புகள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கியவதாக் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நடக்கும் ஊழல்களைப் பற்றிப் பேசியதால் தான், சமூக விரோத சக்திகள் கலவரத்தைத் நடத்தி இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரும் ரவுடிகளும், ஆம்புலன்ஸ் என்ற பெயரில் வாகனங்களை மக்கள் கூட்டத்திற்குள் செல்ல அனுமதித்தனர். அந்த ஆம்புலன்ஸ்கள் நோயாளிகள் யாரும் இல்லாமல் காலியாக இருந்தாகவும், ஆம்புலன்ஸ்க்கு வழிவிட வில்லை என்ற பெயரில் திடிரென அப்பாவிப் பொதுமக்கள் மீது தடியடி நடத்தத் தொடங்கிதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்

அதே நேரத்தில் அமைச்சர்கள் என பலரும் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தன்னை மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மருத்துவனையில் உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் அன்பில் மகேஷ் என அடுத்தடுத்து சென்றது, 30 பேரின் உடலை அவரசரவமாக பிரேத பரிசோதனை செய்து முதல்வர் சென்று மலர் வளையம் வைத்து செய்த தவறை மறைத்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருக்குக் கிடைக்கும் மகத்தான ஆதரவைப் பொறுத்துக்கொள்ளவோ அல்லது தாங்கிக்கொள்ளவோ முடியாத தற்போதைய அரசாங்கம், கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பொதுக்கூட்டங்களுக்கு மட்டுமல்ல, முழு கட்சிக்கும் தொடர்ந்து தடைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும் சதித்திட்டத்தைக் கையாண்டு வருவதாகவும் மனுவிம் தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம் அனைத்தையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார்..

மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது வெறும் கண் துடைப்பு நாடகமே தவிர, உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என நம்ப முடியாது என்றும் தி.மு.க. அரசு பலமுறை இத்தகைய உத்தியைக் கையாண்டுள்ளயாகவும் ஒரு நபர் ஆணைய விசாரணை அமைப்பதால் எந்த முன்னேற்றமும், முடிவும் வரப்போவதில்லை என்றும் மனுவில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசின் தொடர்பு இருப்பதால் மாநில காவல் துறை விசாரணைகள் நடத்தினால் நியாயமான முறையில் விசாரணை நடக்காது என்பதால் விசாரணை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும்

தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் கரூர் மாவட்டத்தில் சந்திப்பதைத் தடை செய்யவோ அல்லது தடுக்கவோ கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜூனா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி, ஜோதி ராமன் அமர்வில் வரும் வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com