Temple land case Ananth venkadesh allowed

வாடகை கட்டாமல் பயன்படுத்தி வந்த கோவில் நிலத்தை கல்விக்காக 18.85 கோடி ரூபாய் கொடுத்து சொந்தமாக்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்கு அப்பகுதியில் சொந்தமாக 24 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் பள்ளிக்கூடம் நடத்துவதற்காக சென்னை மாநகராட்சி வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

ஆனால் ஒப்பந்தபடி கடந்த 1969ம் ஆண்டு முதல் இது வரை வாடகை தரவில்லை என்று கூறி பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2500 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்க சென்னை மாநகராட்சியை அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நடந்த இறுதி விசாரணையில், கோவில் நிர்வாகம், மற்றும் சென்னை மாநகராட்சி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இருதரப்பும் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், கோவில் நிலத்தை தற்போதைய சந்தை மதிப்பின் படி 18 கோடியே 85 லட்ச ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி பத்திரப்பதிவு செய்திருப்பாக தெரிவித்து அது தொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com