Amstrong case Cbi order judge p velmurugan

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார். அப்போது
மனுதாரர்கள் தரப்பில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை என வாதம் வைக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை எனவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை எனவும், உண்மையை வெளிக்கொண்டு வராமல் அவசரமாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விசாரணையில் தலையிட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது..

காவல்துறை தரப்பில், 27 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போட்டுள்ளதாகவும்,விசாரணை நிலுவையில் உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, 6 மாத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறித்தியுள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com