Durai murugan case nskj order dispense with

தமிழக அமைச்சர் துரைமுருகன் அவரது மனைவி ஆகியோர் மீது அதிமுக ஆட்சியில் சொத்துகுவிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வேலுார் செசன்சு கோர்ட் விசாரித்து அமைச்சர் துரைமுருகன் , அவரது மனைவி ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அப்போதைய அதிமுக ஆட்சியில் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் சய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருந்தது.இந்த வழக்கை ஐகோர்ட் விசாரித்து துரைமுருகன் அவரது மனைவியை சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவித்தது தவறானது. எனவே இந்த சொத்துகுவிப்பு வழக்கை மீண்டும் வேலுார் கோர்ட் விசாரிக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வேலுார் கோர்ட் இந்த வழக்கை விசாரிக்காமல் சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏ கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை தனிக்கோர்ட் விசாரணைக்காக வழக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. இதனால் இந்த வழக்கை தனிகோர்ட் விசாரித்து, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதை எதிர்த்து துரைமுருகன் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி சதீஸ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் சார்பாக மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி, துரைமுருகன் மீதான வழக்கை வேலுார் செசன் சு கோர்ட் விசாரிக்க தான் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இதை சென்னையில் உளள் சிறப்பு கோர்ட் விசாரணைக்கு அனுப்பியது தவறானது. அதை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு கோர்ட் துரைமுருகன் மீதான வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும். அவர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி, சென்னை சிறப்பு கோர்ட்டில் நாளை (இன்று) துரைமுருகன் ஆஜராக விலக்கு அளிக்கிறேன். இந்த வழக்கில் போலீஸ் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரம் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com