Madras high court nov 4th orders rss sasikala and other orders

[11/4, 11:37] Sekarreporter 1: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடைமுறைகள் என்ன?

கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

காலாவதி மருந்து வினியோகம் குறித்து உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல்…

அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றம்…

மாறி வரும் பருவநிலை, மக்கள் தொடர்ந்து பயணங்கள் மேற்கொள்வதால் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதாக அரசு அறிக்கை…

தொற்று நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அறிக்கையில் தகவல்…

ஓய்வூதியம் கோரி அரசு மருத்துவமனை மருந்து கிடங்கு பொறுப்பாளர் தொடர்ந்த வழக்கு நவம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைப்பு…
[11/4, 11:39] Sekarreporter 1: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு அம்மை, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் வைரஸ் நோய்கள் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுகாதார துறை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 30ஆண்டுகளில் 30விதமான புதிய தொற்றுகள் வன விலங்குகளிடம் இருந்து பரவி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மக்கள்தொகை அதிகரிப்பு, நகர்மயமாகுதல், நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல், வன அழிப்பு, மனிதர்களின் சமுக நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாக தான் புதிய நோய்கள் பரவுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம், வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் கரணமாகவும், புதிய வகை நோய்கள் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்றியவர்களை கண்காணித்து, தொற்று பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிபதி, அரசு மருத்துவமனைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை காலாவதியாக விடாமல், தேவையுள்ள பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம் என யோசனை தெரிவித்தார்.

இதுசம்பந்தமாக உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறித்திய நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், தான் வழக்கறிஞராக இருந்த போது விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற போது, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்து இல்லை என நர்ஸ் தெரிவித்ததாகவும், பிறகு மருத்துவர் வலியுறுத்திய பின், அந்த மருந்து தனக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதாகவும், அதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினார்.

காலாவதி மருந்துகளை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் காலாவதி மருந்து வினியோகம் குறித்து புகார் செய்வதற்கான வசதியையும் உருவாக்கவேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடைமுறையை வகுப்பது, புகார் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[11/4, 12:12] Sekarreporter 1: ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைவாக விசாரித்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. மற்றும் விசாகா கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஐஜி முருகன், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றி வந்த பெண் எஸ்பி கடந்த 2018ம் ஆண்டில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் பெண் எஸ்பி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, 2019ம் ஆண்டு ஐ.ஜி. முருகன் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முருகன் மீதான புகாரை விசாரிக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா குழு தற்போது மாற்றியமைக்கப்பட்டதாக கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டிக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தற்போது அந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தன் மீதான புகாரை தற்போதைய விசாகா கமிட்டி விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,
ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. மற்றும் விசாகா கமிட்டிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
[11/4, 14:57] Sekarreporter 1: 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி….ஐகோர்ட்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவு…..

காவல்துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன…..

கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைதான் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது….

புதிய வழக்குகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை….

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரிய்ல் அருமனை, நாகர்கோவிலில் நான்குனேரி ஆகியவற்றை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்…

இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்களை உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தலாம்…..

உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம்…..

6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும்…..

இந்த 6 இடங்ஜளில் 2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம்…
[11/4, 15:14] Sekarreporter 1: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பதட்டமான ஆறு இடங்களை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக தொடபட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்எஸ்எஸ் தரப்பில் கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது ,மற்ற இடங்களில் வழங்கவில்லை என்றும், அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல், நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவித்தார்.
பின்னர் உளவுத்துறையின் அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக குறிப்பிட்டிருந்தார் . இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உளவுத்துறை அறிக்கையை படித்துபார்த்ததாகவும்,.கடந்த 2007, 2008 கால ஆண்டுளின் வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.50 இடங்களில்
கோவை,பொள்ளாச்சி, மேட்டுபாளையம்,திருப்பூர் மாவட்டம் பல்லடம், நாகர்கோவில்-நாங்குனேரி,கன்னியாகுமரி மாவட்டம் அருமனை என ஆறு இடங்களை தவிர மற்ற இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்
.காவல்துறையின்ன் உரிய நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
[11/4, 15:49] Sekarreporter 1: Correction

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவில் ஆகிய 6 இடங்கள்
[11/4, 16:18] Sekarreporter 1: கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின் படி காவல்துறை அனுமதி வழங்காததால் தமிழக டிஜிபிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நவம்பர் 6ம் தேதி அணிவகுப்பு அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்த உளவுத்துறை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பார்த்த பிறகு உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உளவுத்துறை அறிக்கையை ஆய்வு செய்ததில் 2007, 2008ஆம் ஆண்டுளில் பதிவான வழக்குகளைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

பின்னர், உளவுத்துறை அறிக்கையில் பதட்டம் நிறைந்த பகுதிகளாக சுட்டிக்காட்டப்பட்ட கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை தவிர மீதும் உள்ள மற்ற 44 இடங்களில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மீதமுள்ள ஆறு இடங்களில் இயல்புநிலை திரும்பிய பின், அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி புதிதாக காவல்துறையிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும் அணிவகுப்பு ஊர்வலத்தில் காவல்துறை நிபந்தனைகள் பின்பற்ற வேண்டும். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது எனவும், மீறி நடந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.
[11/4, 17:09] Sekarreporter 1: தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதம்

தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு

முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு – சசிகலா

ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க முடியாது என்பதால், தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் – சசிகலா

வழக்கின் விசாரணையை நவம்பர் 8 தள்ளிவைப்பு

நீதிபதி எஸ்.சவுந்தர்
[11/4, 17:16] Sekarreporter 1: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் அடுத்த பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுத்தக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
பின்னர்,
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொது செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்த து.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு இன்று இறுதி விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வாதிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், சிவில் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை நிராகரித்தது தவறு என்றும், தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பாகவே முடிவு செய்து உத்தரவிட்டதாக குறிப்பிட்டார் .
கட்சியின் உரிமை தொடர்பாக சிவில் நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.தொடர்ந்து விசாரணையை
வரும் எட்டாம் தேதி நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
[11/4, 17:25] Sekarreporter 1: எல்.ஐ.சி. நிறுவன ஊழியர் பணியிட மாறுதல் நடைமுறைகளில் தலையிட தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அதிகாரமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன கிளையில் பணியாற்றி வந்த சார்பாலா என்பவர் பணியின் போது உயிரிழந்த நிலையில் அவரது மகள் வெண்ணிலாவுக்கு அந்த பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில், பணியிட மாறுதல் கோரி அவர் கடந்த 2017ம் ஆண்டு விண்ணப்பித்த போது அவருக்கு சென்னையை தவிர்த்து காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி, திருத்தனி உள்ளிட்ட பகுதிகளில் பணியிட மாறுதல் அளிக்க எல்.ஐ.சி. நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

இதற்கெதிராக வெண்ணிலா தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் அளித்த புகாரில், தாம் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் என்பதால் பணியிட மாறுதலில் பாகுபாடு
காட்டியதாக புகார் அளித்திருந்தார். இதனை விசாரித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், வெண்ணிலாவுக்கு சென்னையில் பணியிட மாறுதல் வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எல்.ஐ.சி. நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளில் தலையிட எல்.ஐ.சி. நிறுவன ஊழியர் பணியிட மாறுதல் நடைமுறைகளில் தலையிட தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அதிகாரமில்லை என கூறி, எல்.ஐ.சி. ஊழியரின் பணியிட மாற்றம் தொடர்பாக ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[11/4, 17:53] Sekarreporter 1: ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்பு நிலுவையில் உள்ளது.இந்த வழக்கில்
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளை களங்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறியுள்ளதால் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரிடம் அனுமதி கேட்டு இருந்தார்.
அவர் அனுமதி வழங்கி இருந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சார்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்த து. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதி பதி பி. என். பிரகாஷ் நீதிபதி டீக்காரமன், அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
[11/4, 20:42] Sekarreporter 1: ஊர்வலம் உள்ளே தான்
[11/4, 20:43] Sekarreporter 1: Not outside mhc
[11/4, 20:44] Sekarreporter 1: RSS
[11/4, 20:44] Sekarreporter 1: ஊர்வலம் உள்ளே தான்
[11/4, 20:49] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த அனுமதி….

கோவை, நாகர்கோவில், பல்லடம் உள்ளிட்ட ஆறு இடங்களில் அனுமதி மறுத்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு ஏற்படுத்தக் கூடாது; லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என நிபந்தனை…

மதம், ஜாதி குறித்து தவறாக பேசவோ கூடாது; இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது – உயர் நீதிமன்றம்…

நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி….
[11/4, 20:50] Sekarreporter 1: கோவை, நாகர்கோவில், பல்லடம் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அனுமதி வழங்காததால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நவம்பர் 6ம் தேதி அணிவகுப்பு அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்த உளவுத்துறை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பார்த்த பிறகு உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உளவுத்துறை அறிக்கையை ஆய்வு செய்ததில் 2007, 2008ஆம் ஆண்டுளில் பதிவான வழக்குகளைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

பின்னர், உளவுத்துறை அறிக்கையில் பதட்டம் நிறைந்த பகுதிகளாக சுட்டிக்காட்டப்பட்ட கோவை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தது சரியே என உத்தரவிட்ட நீதிபதி, இந்த பகுதிகளில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி இரண்டு மாதங்களுக்குப் பின் விண்ணப்பிக்கலாம் எனவும், அவற்றை பரிசீலித்து தகுந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மற்ற 44 இடங்களைப் பொறுத்தவரை, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்கள், ஸ்டேடியங்களில் அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த நிகழ்வின் போது, பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில், பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சியின் போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாக பேசவோ கூடாது எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது எனவும் லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, முதலுதவி, ஆம்புலன்ஸ், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், குழல் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது எனவும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதற்கான இழப்பீட்டை செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்த நீதிபதி, இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

Call Now ButtonCALL ME