Madras high court news date 7/8/2021

[[8/6, 07:31] Sekarreporter: [8/5, 15:46] Sekarreporter: [8/5, 15:45] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1423226178542837761?s=08
[8/5, 15:45] Sekarreporter: தனுஸ் வழக்கு full order IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS Dated: 05.08.2021 CORAM: THE HON’BLE MR. JUSTICE S.M.SUBRAMANIAM WP No.33800 of 2015 Mr.K.Dhanush .. Petitioner Vs 1. The State of Tamilnadu, Rep. By its Secretary, https://sekarreporter.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-full-order-in-the-high-court-of-judicature-at-madras-dated-05-08-2021-coram-the-honble-mr-just/
[8/5, 15:46] Sekarreporter: For Petitioner : Mr.S.Vijayan

For Respondents : Mr.V.Veluchamy
Government Advocate
[8/6, 07:32] Sekarreporter: [8/6, 07:31] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1423259935190568961?s=08
[8/6, 07:31] Sekarreporter: Full order IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 05.07.2021 CORAM THE HONOURABLE MR.JUSTICE M.GOVINDARAJ ADVOCATE: M.Ravi & Priya Ravi, argued in a case relating to promotion to the post of Deputy Inspector General of Prison and the Order of Hon’ble Mr.Justice M.Govindaraj : The Petitioner to make a representation setting out all the grounds with substantiating materials as well as judicial precedents to the 1st respondent within a period of three weeks from the date of receipt of a copy of this order. On such representation, the respondents are directed to consider the same and after forming appropriate opinion as to the objects and reasons of the classifications particularly between the General Category and Women Category, pass a reasoned appropriate order within a period of eight weeks thereafter. https://sekarreporter.com/full-order-in-the-high-court-of-judicature-at-madras-dated-05-07-2021-coram-the-honourable-mr-justice-m-govindaraj-advocate-m-ravi-priya-ravi-argued-in-a-case-relating-to-promotion-to-the-post/
[8/6, 07:32] Sekarreporter: [8/5, 18:08] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1423261967947423747?s=08
[8/5, 18:08] Sekarreporter: Full order CORAM : THE HONOURABLE MR.JUSTICE S.VAIDYANATHAN W.P.No.20389 of 2020 K.Mariammal … Petitioner —order dated 01.07.2021 passed by Hon’ble Mr. Justice S.Vaidyanathan in W.P.No.20389 of 2020. Petitioner herein (aged 73 years) is the wife of a deceased Freedom Fighter. She is receiving State Government Freedom Fighter’s Pension. She has sought for Central Government Freedom Fighter’s Pension. Writ Petition is allowed. https://sekarreporter.com/full-order-coram-the-honourable-mr-justice-s-vaidyanathan-w-p-no-20389-of-2020-k-mariammal-petitioner-order-dated-01-07-2021-passed-by-honble-mr-justice-s-vaidyanathan-in-w/
[8/6, 07:32] Sekarreporter: [8/5, 18:08] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1423261967947423747?s=08
[8/5, 18:08] Sekarreporter: Full order CORAM : THE HONOURABLE MR.JUSTICE S.VAIDYANATHAN W.P.No.20389 of 2020 K.Mariammal … Petitioner —order dated 01.07.2021 passed by Hon’ble Mr. Justice S.Vaidyanathan in W.P.No.20389 of 2020. Petitioner herein (aged 73 years) is the wife of a deceased Freedom Fighter. She is receiving State Government Freedom Fighter’s Pension. She has sought for Central Government Freedom Fighter’s Pension. Writ Petition is allowed. https://sekarreporter.com/full-order-coram-the-honourable-mr-justice-s-vaidyanathan-w-p-no-20389-of-2020-k-mariammal-petitioner-order-dated-01-07-2021-passed-by-honble-mr-justice-s-vaidyanathan-in-w/
[8/6, 14:44] Sekarreporter: [8/6, 14:44] Sekarreporter: Full order of IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 17.06.2021 CORAM : THE HONOURABLE MR. JUSTICE S.VAIDYANATHAN W.P.No.41427 of 2016 https://sekarreporter.com/full-order-of-in-the-high-court-of-judicature-at-madras-dated-17-06-2021-coram-the-honourable-mr-justice-s-vaidyanathan-w-p-no-41427-of-2016/
[8/6, 14:44] Sekarreporter: Disputes take quarter Century to be concluded from Tribunal to the High Court level and in case of demise of the employees, it becomes difficult for the employer and the Court to find out their legal heirs, to serve notice. I had an occasion to deal with a Writ Petition of the year 2002, involving an industrial dispute which was pending for more than 28 years. The whereabouts of the employee in that case was not able to be ascertained and the Lawyers representing the employee as also the Management died due to Covid-19. That is the reason for the aforesaid observation.
21. Even though the Labour enactment says that, it is meant for speedy disposal, it moves in a snail’s pace only and time has come where the legal heirs of the deceased employee’s legal heirs are going to continue the dispute, i.e. the employees are going to leave the legacy of litigation to their grand children/future generations.
22. The employees must furnish their date of birth and Aadhar Card before the Tribunal, and mobile numbers, which shall be retained till the issues are brought to a logical end, even though they are permitted to change the provider. In all pending matters, the Authority concerned, Labour Court and Tribunals must seek the above particulars, as dispute does not end in Lower forums.

23. In fine, W.P.No.6384 of 2021 is ordered on the above terms. It is made clear that, the name of the 13th employee shall be correctly spelt in the Reference as ‘V.Shanthamma’. Since this Court has ordered W.P.No.6384 of 2021, no further orders are required in W.P.No.41427 of 2016. No costs. Consequently, connected W.M.P.No.35401 of 2016 in W.P.No.41427 of 2016 and W.M.P.Nos.7385, 7389 and 7390 of 2021 in W.P.No.6834 of 2021 are closed.
[8/6, 15:24] Sekarreporter: WP No 16376 OF 2021 Writ Petition regarding Transfer Certificate Matter WP allowed with directions Justice N Anand Venkatesh judgment dated 06-08-2021 Advocates P. Ebenezer Paul and V. Krishnamurthy argued for Petitioner Association advocate ebinesar paul for association. https://sekarreporter.com/wp-no-16376-of-2021-writ-petition-regarding-transfer-certificate-matter-wp-allowed-with-directions-justice-n-anand-venkatesh-judgment-dated-06-08-2021-advocates-p-ebenezer-paul-and-v-krishnamurthy/

8/6, 11:38] Sekarreporter: விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் கல்வி மையத்தின் மூலம் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள கல்வி மையம் மூலம், ஏழு முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வரவேற்று, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதை ரத்து செய்யக் கோரியும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரியும், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சமீபத்தில் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறி, அதுதொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர் சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தற்போதைய நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டம் அமலில் உள்ளதால், அதை பின்பற்ற வேண்டும் எனவும், திருவள்ளுவர் பல்கலைக்கழக அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ள போதும், அது வரை அச்சட்டம் அமலில் இருக்கும் என்பதால், அச்சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும், விழுப்புரம் மையத்தின் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை எனவும் கூறி, அந்த அறிவிப்பை ரத்து செய்து, முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் வழக்கை முடித்து வைத்தனர்.

விசாரணையின் போது, ஆட்சி என்பது சைக்கிள் போல மாறி மாறி வரும் என்ற போதும், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
[8/6, 12:28] Sekarreporter: கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை முழுமையாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் வரை, அவற்றை குத்தகைக்கு விடுவது, குத்தகையை புதுப்பிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதற்காக, கோவில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன… இருப்பினும் இணையதளத்தில் தேடும் போது அந்த விவரங்கள் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிலங்கள் குறித்த ஆவணங்கள் இல்லாததால், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க கோவில்களால் இயலவில்லை எனவும், கோவில்களுக்கு நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்ட விவரங்கள், அங்குள்ள கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருக்கும் என்பதால் அவற்றை பதிவு செய்து, வெளியிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை முழுமையாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் வரை, அவற்றை குத்தகைக்கு விடுவது, குத்தகையை புதுப்பிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனுவுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
[8/6, 13:19] Sekarreporter: இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்க க்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனிநீதிபதி தள்ளுபடி செய்த நிலையில் உத்தரவை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனுவானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா தரப்பில், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, லைகா நிறுவனத்தின் மேல் முறையீட்டு வழக்கை, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது..
[8/6, 17:08] Sekarreporter: பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் குறித்த விசாரணைக்காக அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை ஆஜர்படுத்தியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது யூடியூப் சேனலில் அவற்றை பதிவேற்றி ஆபாசமாக பெண்களை இழிவுபடுத்தி பேசியதால் யூடியூபர் மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதனின் மனைவி கிருத்திகா ஆகியோர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். கிருத்திகா கை குழந்தையுடன் சிறையில் இருந்ததால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. பப்ஜி மதன் மீது குண்டாஸ் பாய்ந்தது. இந்த நிலையில் மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான விசாரணை அறிவுரைக் கழகத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பப்ஜி மதனை புழல் சிறையில் இருந்து கொண்டு வந்து ஆஜர்படுத்தினர். அப்போது மதனின் மனைவி கிருத்திகா கை குழந்தையுடன் வந்திருந்தார். அவரது பெற்றோரும் உடன் வந்திருந்தனர். ஆனால் சிறைத்துறை போலீசார் அருகில் சென்ற பேச அனுமதிக்கவில்லை.

குண்டாஸ் பதிவு செய்யப்பட்டால் அறிவுரை கழகத்தில் விசாரணை நடத்தி குறிப்பிட்ட வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டது முறை தானா ? என்பதை விசாரிக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக கொண்ட அறிவுரைக் கழகம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரமும் கொண்டது. அதனடிப்படையில் மதன் வழக்கில் பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரை கழகத்தின் உறுப்பினர்களான
ஓய்வு பெற்ற நீதிபதிகள் மாசிலாமணி, ரகுபதி மற்றும் ராமன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
[8/6, 18:07] Sekarreporter: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன.

இப்புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் பெறுவத்ற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சென்னை எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர்.

இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...