ஶ்ரீதேவி குடும்ப சொத்து வழக்கு

நெடுஞ்சாலை துறைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடாக 1 கோடியே 87 ஆயிரத்து 183 ரூபாய் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் குடும்பத்திற்கு வழங்கியது குறித்து விசாரணை நடத்தக்கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மையூர் முதல் அக்கரை வரை கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்துவதற்காக மாநில நெடுஞ்சாலைதுறை நிலம் கையகப்படுத்தியது.

இதில், தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான 1420 சதுர அடி நிலத்துக்கான இழப்பீடாக 1 கோடியே 87 ஆயிரத்து 183 ரூபாயை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோருக்கு வழங்கியது குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், குறிப்பிட்ட அந்த நிலம் தனது தாத்தாவிற்கு சொந்தமானது என்றும், தகுதி இல்லாத ஶ்ரீதேவி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், அதன் அடிப்படையில், ஶ்ரீதேவி குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை திரும்ப வசூலிக்க வேண்டும் 2024ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அளித்த மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரரின் கோரிக்கையை 4 வாரங்களில் பரீசிலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com