வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்… சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு…

வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்…
சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கியது  செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.மேலும்,
3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் ,சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தீபா,தீபக் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து
மனு அளித்துள்ளனர். இந்த மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து முடிவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version