வீரவணக்கத்துடன்🙏🙏🙏 மீரா ஆறுமுகம் வழக்கறிஞர்

*பிபின் இராவத்- க்கு கவியாஞ்சலி*

உத்தரகாண்டில்
பிறந்த- நீ
பல உயரங்களை
அடைந்ததாலா
உயரத்தில்
செல்லும்போது
மறைந்தாய்?

தேசத்தைக்காக்க
தேசிய பாதுகாப்பு
கல்லூரியில் படித்தாய்!
தேசத்தை காத்து
தேகத்தை இழந்தாய்!!
தமிழகத்தில் – நீ
பயின்றதாலா
குன்னூரின் காற்றினிலே
கலந்தாய்?

பாரதத்தை காத்தாய்
பல்வேறு விருதுகளும் பெற்றாய்!!

பணிக்காக சென்றாய்
பனியோடு மறைந்தாய்!

பணியோடு
பனியும் உன்னை
சொந்தம் கொண்டாடியதோ?

தேசத்தைக்காக்கும்
பொறுப்பிற்காக
தலைமுறையாய்
அர்ப்பணித்த
குடும்பத்தில் பிறந்து
நாட்டினை காக்க
தன்னையும்
தாரத்தையும் தந்தவரே
தலை வணங்குகிறேன்!!
இந்திய தேசத்தின்
27வது படைத்தலைவராக
இருந்து இதயத்தில்
உறைந்தவரே!!
உந்தன் கடைசி
மூச்சு கறைந்தது
எம் தமிழ் மண்ணில்
கரைந்து போகிறோம்
நாங்களும்…
தமிழக தலைவரும்
தவித்து விரைந்தார்
தன் வீர வணக்கத்தை
சமர்ப்பிக்க…

நீங்கள் மறைந்தாலும்
உங்கள் வீரவரலாறு என்றும்
எங்கள் நெஞ்சத்தில்
நிலைத்திருக்கும்!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனையும்
இயற்கையையும் வேண்டுகிறோம்.

வீரவணக்கத்துடன்🙏🙏🙏
மீரா ஆறுமுகம்
வழக்கறிஞர்

You may also like...

Call Now ButtonCALL ME