வி.என்.சுதாகரன் சரண் அடைந்தார்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் பெயரிலான நற்பணி மன்றத்தின் மாநில அமைப்பாளராக இருந்த கோபி ஸ்ரீதரன் என்பவரிடம் கடந்த 2001-ம் ஆண்டு பணம் கேட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக வி.என்.சுதாகரன் உள்பட 4 பேர் மீது சென்னை பாண்டிபஜார் காவல்துளை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வி.என்.சுதாகரன் காவல்துறையினறால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் வி.என்.சுதாகரன் உள்பட 4 பேர் மீது சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சுதாகரன், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டதால் இந்த வழக்கு விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 7.9.2021 அன்று சுதாகரனுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி ஏ.எஸ்.ஹரிகரகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வி.என்.சுதாகரன் சரண் அடைந்தார்.

அவர், நீதிமன்றத்தில் ஆஜராக இயலாததற்கான காரணத்தை தெரிவித்து அவர் மீதான ஜாமீனில் வரமுடியாத வாரண்டை திரும்ப பெறக்கோரி அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்க கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பி.சுரேஷ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணைக்கு பின்பு, சுதாகரன் மீதான வாரண்டை திரும்ப பெற்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 17-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version