வழக்கறிஞர் வி.எஸ்.கோபு பேட்டி*

*தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது என அன்புமணி தரப்பு வெயிட்ட கடிதம் உண்மைக்கு புறம்பானது; அக்கடிகத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது*

*அன்புமணி தரப்பு வெளியிட்ட கடிதம் குறித்து தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பினர் புகார் அளிக்க உள்ளனர்*

*யார் யார் பேச்சை கேட்டு சொந்த தந்தையை தூக்கி எறியக்கூடிய நபராக உள்ளார் அன்புமணி ; தந்தையை மதிக்க தெரியதாவர் எப்படி கட்சியை வழிநடத்துவார்*

*மருத்துவர் ஐயாவை சந்தித்து தனது தவறை உணர்ந்து நான் திருத்திக்கொள்கிறேன் என அன்புமணி கூறி அவர் சரண் அடைந்தால் நிச்சயம் விடிவுகாலம் இருக்கும்*

*தி.நகரில் அன்புமணி வசித்த இல்லத்தை ஐயாவிற்கு தெரியாமல் அலுவலக முகவரியாக மாற்றி உள்ளனர். இவர்கள் புதிதாதக கட்சி ஆரம்பித்தால் மக்கள் எப்படி இவர்களை நம்புவார்கள் என ராமதாஸ் வழக்கறிஞர் வி.எஸ்.கோபு பேட்டி*

oplus_0

சென்னை உயர்நீதிமன்றம் அருகே *பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு* செய்தியாளர்களை சந்தித்தார்.

((அன்புமணி நடத்திய பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தொடர்பாக)) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்;

நேற்று பாமமக வழக்கறிஞர் பாலு பேட்டி கொடுத்திருந்தார். அது குறித்து விளக்க உள்ளேன். பாமக கட்சியின் தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிகளில் அன்புமணி, வடிவேல் இராவணன், திலகபாமா அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியதாக ஒரு கடிதத்தை காண்பித்து உள்ளார்கள்.

அந்த கடிதத்தில் இருந்த தேதி, ஆண்டு, தேர்தல் ஆணையத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றில் தவறாக இருந்தது .

தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதம் என அவர்கள் காட்டியது முன் தேதி இட்ட கடிதமாக உள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என கூறி பாலு வெளியிட்டது அப்பட்டமான கட்சிக்கு துரோகம் செய்துள்ளார்கள்.

இவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க உள்ளோம் என கூறினார். தேர்தல் ஆணையத்தின் சின்னம் இல்லாமல் தேர்தல் ஆணையத்தால் கடிதம் வந்துள்ளது என கூறி உள்ளனர்.

இந்தியா முழுவதும் போற்றப்படக்கூடிய மனிதராக அன்புமணி உள்ளார். ஆனால் இன்று யார் யார் பேச்சையோ கேட்டு சொந்த தந்தையை தூக்கி எறியக்கூடிய நபராக உள்ளார்.
சொந்த தந்தையை மதிக்க தெரியாதவர்கள் கட்சியை எப்படி வழி நடத்துவார் எனவும்
தொண்டர்களையும் அவரை நம்பி உள்ள சமூகத்தையும் அன்புமணி குழப்பி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

அன்புமணியை இப்படி கீழ்த்தனமான வேலைகளை செய்ய சொல்கிறார்கள்.
அன்புமணியின் செயல்பாடுகள் வேதனை தருவதாக உள்ளது. தொண்டர்கள் வேதனைப்படுகிறார்கள். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தான் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து மருத்துவர் அய்யா அவர்கள் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் அவரை நீக்கி உள்ளார் என தெரிவித்தார்.

அன்புமணியின் அரசியல் எதிர்காலத்தை குழி தோண்டும் புதைக்கும் வகையில் செயல்படுகிறார்.
சதிகாரர்களின் சூழ்ச்சிகள் சிக்க வேண்டாம், சகுனிகள் உங்களை சுற்றி இருக்கிறார்கள், உங்களை சுற்றி குழி தோண்டி இருக்கிறார்கள். உங்களை ஒரு பொருட்டாக அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் உங்களை தவறாக வழி நடத்துகிறார்கள் எனவும் அன்புமணியை தெரிவித்தார்.

பெற்ற தந்தையை காட்டிலும் தொண்டர்களை காட்டிலும் பெரிய சமூகம் உங்கள் பின்னால் நிற்கிறது என்பதை மறந்து இப்படி கீழ்த்தரமான வேலைக்கு துணை போகாதீர்கள் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். உடனே மருத்துவர் ஐயாவை சந்தித்து பெற்ற தந்தையை சந்தித்து தவறை உணர்ந்து நான் திருத்திக் கொள்கிறேன் என கூறி சரண் அடைந்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு விடிவுகாலம் இருக்கும் என கூறினார்.

பல பேர் உழைத்து வளர்த்த கட்சி பாமக
அவர்களின் நன்மைக்கும் 21 பேர் உயிரிழந்த உயிரிழப்பை அவர் நினைத்து பார்க்க வேண்டும். போலியான தேர்தல் ஆணைய கடிதத்தை வெளியிட்டு தொண்டர்களை குழுப்பி வருகிறார் அன்புமணி என தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது என பச்சையாக பொய் சொல்லி உள்ளார்கள் அதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக வெளியிடுவோம்.
எங்களின் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்தை நாட இருக்கிறோம் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கத்தை கொடுப்பார்கள்.
தி.நகரில் சின்னவர் வசித்த இல்லத்தை ஐயாவுக்கு தெரியாமல் அலுவலக முகவரியாக மாற்றியுள்ளனர்.
புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்தாலும் மக்கள் எப்படி இவர்களை நம்புவார்கள் என கேள்வி எழுப்பினார்கள்.

மருத்துவர் ராமதாஸ் நடத்திய பொதுக்குழுவை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்.
அங்கீகரிக்கப்படாத மாநில கட்சி எடுக்கக்கூடிய முடிவு தேர்தல் ஆணையத்தில் அதன் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் மாநில கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு தலைவர் பொருளாளர் சொல்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது அந்த அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டும்தான் உள்ளது. எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து யார் தலைவர் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களை டெல்லியில் வைத்துக் கொண்டு இப்படி செய்கிறார்கள்.
மேலும் ஒரு சில தரப்புகளை சேகரிக்க வேண்டி உள்ளது சேகரித்த பின்பாக தேர்தல் ஆணையத்திடம் நாங்களும் முறையிடுவோம் என தெரிவித்தார்.

ராமதாஸ் தரப்பினர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளனர்

தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி தரப்பு வெளீயிட்ட கடிதம் குறித்து புகார் அளித்தும் அதில் உள்ள முறைகேடுகள் குறித்தும் தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாக தெரிவித்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version