எச்சரிக்கை கலைமகள் சபா நிதி நிறுவனம் மோசடி வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார்
கலைமகள் சபா நிதி நிறுவனம் மோசடி வழக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி மயிலாடுதுறை நாமக்கல் நாகப்பட்டினம் புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்ட கலெக்டர்கள் இதுவரை ஐ கோர்ட் உத்தரவுபடி கலைமகள் சபாவுக்கு உள்ள சொத்து விவரங்களை கண்டறிந்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவே அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இதை கேட்ட நீதிபதிகள் 4 மாவட்ட கலெக்டர்களும் வருகிற 19ஆம் தேதி கலைமகள் சபாவுக்கு உள்ள சொத்து விவரங்களை சேகரித்து அதை தொடர்பான அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் ஐகோர்ட்டில் ஆஜராக உத்தரவுட நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை வருகின்ற 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்