மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பஞ்சாயத்து டெண்டர்களை தனது மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக தனது மகன் அரசு டெண்டர்களை எடுத்து வந்ததாக கூறினர்.
டெண்டர் முறைகேடு புகாரில் வேலூர் மாவட்டம் நாகல் ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட்டை பதவி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வேலூர் மாவட்டம் நாகல் ஊராட்சி மன்றத் தலைவராக பாலா சேட் என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில், டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவரை பதவியில் இருந்து நீக்கி கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை செய்யக்கோரி பாலா சேட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, பஞ்சாயத்து டெண்டர்களை தனது மகனுக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாம் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக தனது மகன் அரசு டெண்டர்களை எடுத்து வந்ததாக கூறினர். 
இது தொடர்பான விசாரணைக்கு தொடர்ச்சியாக ஆஜராகி விளக்கம் அளித்து வந்த நிலையிலும் பதவி நீக்கம் செய்யப்படுள்ளதாக தெரிவித்தனர். போதிய ஆதாரங்கள் இல்லாமல் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி மனு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.