முதல்வர் விஜய்யிடம் விவாகாரத்து கோரி அவரின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த வழக்கு, ஆகஸ்ட் 7 ம் தேதிக்கு தள்ளி வைத்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் விஜய்யிடம் விவாகாரத்து கோரி அவரின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த வழக்கு, ஆகஸ்ட் 7 ம் தேதிக்கு தள்ளி வைத்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ம் தேதி திருமணம் நடைப்பெற்றது.
திருமணம் ஆகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் விஜய்யிடம் இருந்து விவகாரத்து வழங்க கோரி அவரின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடிகர் விஜய், ஒரு நடிகையுடன் உறவில் இருப்பது தெரியவந்தாகவும், இதனால் மிகுந்த மன உலைச்சல் அடைந்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின் 2021 முதல் 2022 ம் ஆண்டு வரை இது தொடர்பாக நடிகர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த வித பலனும் இல்லை என தெரிவித்தார்.
2021 முதல் இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் பிரிந்தே வாழ்ந்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்திற்கும் தனக்கும் மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் முதல்வர் விஜய் பிரிந்து வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யுடன் நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் வழக்கு முடியும் வரை அல்லது மாற்று வசதி செய்து தரும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும், விஜய் நிரந்தரமாக ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் விஜய், சங்கீதா தரப்பில் காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரிய மனுக்கள் மீது வாதம் வைக்கப்பட்டது.
அந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஆக்ஸ்ட் 7 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.