மாநில அரசு இதுவரை எடுத்த முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்படும் என்பதால், பராமரிப்பு நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறை சிறப்பு பிளீடரிடம் srinivasan அறிவுறுத்தினர்
அன்னிய மரங்களை அகற்ற அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், தொடர் பராமரிப்புக்கு நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, சீமை கருவேலம் மற்றும் அன்னிய மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில், அவை மீண்டும் வளரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு தொடர் பராமரிப்புக்கான நிதியை, மாநில அரசு விடுவிக்க வேண்டும். பராமரிப்பு சரிவர நடக்கவில்லை எனில், அப்பகுதியில் மீண்டும் அன்னிய மரங்கள் வளர்ந்துவிடும் என, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.
அன்னிய மரங்களை அகற்ற மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த பணிகளை, நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இருப்பினும், தொடர் பராமரிப்புக்கு உரிய நிதியை வழங்காவிட்டால், மாநில அரசு இதுவரை எடுத்த முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்படும் என்பதால், பராமரிப்பு நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறை சிறப்பு பிளீடரிடம் அறிவுறுத்தினர்.